குமரன்

இந்தப் படத்தில் எத்தனைப் பூச்சிகள் இருக்கின்றன?

பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மறைந்திருக்கும் புதிர்களை கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள். அமெரிக்காவின் மிகப்பெரிய பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா ஒன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருக்கும் பூச்சிகளைப் பார்வையாளர்கள் கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. எதையாவது கண்டுபிடிப்பது என்றால் யாருக்குத் தான் ஆர்வம் வராது. வாருங்கள் தாவரங்களின் இலைகள் மற்றும் மரக் கிளைகளுக்குள் மறைந்திருக்கும் பூச்சிகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இதற்கு அவர்கள் கொடுத்த நேரம் ஏழு வினாடிகளே ஆகும். பார்வையாளர்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக ...

Read More »

‘கிண்ணியாவில் எல்லைகள் ஒடுங்கும் அபாயம்’

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச எல்லைகள் ஒடுங்கி வரும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார். கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இன்று (02) கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது, “கிண்ணியா பிரதேசம் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற ஒரு பகுதியாகும். திருகோணமலை மாவட்டத்தில் சனஅடர்த்தி கூடிய பகுதியாகவும் கிண்ணியா காணப்படுகிறது. இதன் எல்லையைக் குறைக்கும் முயற்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. “இதுவரைக்கும் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட எல்லைகள் சரிவர இடப்படாத காரணத்தால், ...

Read More »

துமிந்தவின் பொது மன்னிப்பை சவாலுக்குட்படுத்தி மனு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்குட்படுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மூலம், பிரிவு 12 (1) ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டத்தின் சமமான பாதுகாப்புக்காக என்ற தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் மனுதாரர் ...

Read More »

அரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை!

கேரளத்தின் மண்ணடி கிராமத்தில் 1941-ல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் புனே திரைப்படக் கல்லூரியிலும் படித்தவர். 1972-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ மலையாளத்தில் புதிய அலை சினிமாவைத் தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தின் முதல் திரைப்படச் சங்கமான ‘சித்ரலேகா’வை நிறுவியவர்களில் ஒருவர். பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட தேசிய அளவிலான விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர். ஜூலை மூன்றாம் தேதி தனது 80 வயதை நிறைவுசெய்ததையொட்டி, அடூர் கோபாலகிருஷ்ணனிடம் உரையாடியதிலிருந்து… கலை எப்போதாவது உங்களுக்கு ஆறுதலாக ...

Read More »

எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?

எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு அச்சத்தைத் தருகிறது. டைக்ரேவில் உள்ள கர்ப்பிணி மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களுக்குப் பரிசோதனை ...

Read More »

வெப் தொடரில் அறிமுகமாகும் ஆர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர் – நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ...

Read More »

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் ...

Read More »

எழுத்தெண்ணிப் பயின்ற இளங்குமரனார்!

ஊர்ப் பெயரும் தாயார் பெயரும் ஒன்றாகக் கொண்டவர் இளங்குமரனார் (1930 – 2021). தாயார் பெயர் வாழவந்தாள். ஊர்ப் பெயர் வாழவந்தாள்புரம். தந்தை பெயர் இராமு; ஊர் வைத்த பெயர் ‘படிக்கராமு’. பெற்றோரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததால், அந்த நாள் வழக்கப்படி அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘கிருஷ்ணன்’. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் நூல்கள் தந்த தனித்தமிழ் உணர்வால் இவர் மாற்றிக்கொண்ட பெயர், ‘இளங்குமரன்’. இடைவிடாமல் படிக்கும் தந்தையாரின் பழக்கம் இவரிடமும் ஒட்டிக்கொண்டது. திருக்குறள் முழுவதையும் 12 வயதுக்குள்ளும், தொல்காப்பியம் முழுவதையும் 16 வயதுக்குள்ளும் மனப்பாடம் ...

Read More »

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனின் திரை உலக அனுபவங்கள்

சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. “சிறுகதை மன்னன்” என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது. புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள். இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ...

Read More »

விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் நைக் முத்திரை காலணிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE (நைக்) முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என NIKE நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளமை தொடர்பில் சிறிலங்காவின்  வெளியுறவு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து NIKE Inc. நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம், குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளதாகசிறிலங்காவின்  வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, ...

Read More »