தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனாவால் சினிமா துறை முடங்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதில் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர் – நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில், தற்போது நடிகர் ஆர்யா, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சித்தார்த்தின் ‘அவள்’, நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal