முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்குட்படுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மூலம், பிரிவு 12 (1) ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டத்தின் சமமான பாதுகாப்புக்காக என்ற தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மனுவின் இறுதித் தீர்ப்பு வரும் வரை துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் மனுதாரர் கோரியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal