குமரன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு புதிய தேசிய அமைப்பாளர் நியமிப்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   புதிய தேசிய அமைப்பாளராக    மட்டகளப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த விடயத்தினை தெரிவித்தார். முன்னதாக தேசிய அமைப்பாளராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணன் கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாக கூறிஅவர் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டதாக  தெரிவித்தார்.​ மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்   உப செயலாளராக தென்  தமிழீழம் , திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் இரா.சிறீஞானேஸ்வரன்( ...

Read More »

முன்னணியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் மணிவண்ணன் நீக்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய குழு இன்று கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். இந்த தகவலை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு ...

Read More »

மீண்டும் அரசியல்வாதியாகும் சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, தனது அடுத்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளாராம். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கி இருந்தார். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் அடுத்ததாக சூர்யாவை வைத்து ...

Read More »

மோடியின் கருத்திற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை

13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளிற்கு சிறிலங்கா உறுதிமொழி எதனையும் வழங்கவில்லை. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் சிறிலங்கா  அரசாங்கத்தை தமிழ் மக்களின் ஐக்கிய இலங்கைக்குள்ளான சமத்துவம் நீதி கௌரவம் குறித்த அபிலாசைகளுக்கு தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டுள்ள இந்திய பிரதமர் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களின் ஆணை மற்றும் அரசமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நல்லிணக்கதத்தை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து இன மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுக்கும் என ...

Read More »

கொவிட்-19: தடுப்புமருந்தானது பயன்பாட்டுக்கு வருவதற்குள் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்!

உலகளவில் கொரோனாத் தொற்றுக்கான தடுப்புமருந்துகள் பரவலாக கிடைப்பதற்குள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்குமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 9 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்த நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா வினுடைய அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான்(Michael Joseph) தெரிவித்துள்ளார். மேலும் இது, தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகப் பெரிய சவால் எனவும் அவர் ...

Read More »

நாளைய ஹர்த்தாலில் அணி திரள சுரேஷ் அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக மரணித்துப் போனவர்களை அஞ்சலிக்கும் நிகழ்வுகளை அரசாங்கம் தடை செய்வதைக் கண்டித்தும் அஞ்சலிப்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தியும் நாளை நடைபெறவிருக்கும் ஹர்த்தாலில் அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டி தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரின் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருக்கின்றார். இது குறித்த அவரது அறிக்கை வருமாறு; “தமிழ் மக்களின் விடுதலைக்காக லட்சக்கணக்கான பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கான அஞ்சலி செலுத்துவதும் அவர்களை கௌரவபடுத்துவதும், ...

Read More »

மோடி மஹிந்தவுக்குச் சொன்ன செய்தி; கூட்டமைப்பு வரவேற்பு

ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்ய இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விடுத்த அழைப்பை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரூவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

சவுதி அரேபியா வழியில் ஆஸ்திரேலியா: அகதிகள் விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனம்

ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் சோதனை நடத்தவும் அலைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்வதற்கான கூடுதல் அதிகாரத்தை ஆஸ்திரேலிய எல்லைப்படைக்கு வழங்கும் விதமாகவும் புதிய மசோதாவை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளை தடைச் செய்ய அனுமதிக்கும் இந்த மசோதாவுக்கு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சவுதி அரேபியா பத்திரிக்கையாளர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசா பெற்று வசிக்கும் சுல்தான் எனும் சவுதி அரேபியர், ஆஸ்திரேலியாவில் இந்த முயற்சி சவுதி அரேபியா போன்றே உள்ளதாகக் கவலைத் தெரிவித்துள்ளார். சவுதியில் ...

Read More »

திலீபனை முன்னிறுத்தி சில கேள்விகள்

திலீபனின் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்? யாருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்? அவர் இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். இரண்டு அரசுகளிடமும் நீதிகேட்டு உண்ணாவிரதம் இருந்தார். அதாவது திலீபனின் உண்ணாவிரதம் எனப்படுவது நாட்டுக்கு உட்பட்டது அல்ல.  அதற்கு ஒரு பிராந்திய பரிமாணம் உண்டு. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பிராந்திய பரிமாணத்தை அடைந்ததன் விளைவாக எழுதப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. அந்த உடன்படிக்கையின் போதாமைகளையும் இயலாமைகளையும் உணர்த்துவதற்காகவே திலீபனும் பூபதியும் உண்ணாவிரதம் இருந்தார்கள். அதாவது மறு வளமாகச் சொன்னால் இந்தியத் தலையீட்டின் ...

Read More »

முன்னாள் இன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்ற தடை!

மட்டக்களப்பில் திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உட்படவர்களுக்கு இரவேடு இரவாக நேற்று (25) இரவு அவர்களின் வீடுகளுக்கு சென்;று நீதிமன்ற தடை உத்தரவை காவல் துறையினர் கையளித்துள்ளனர். தியாகதீபம் திலீபன் நினைவு தினம் செய்வதற்கு தமிழ் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசில் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய பற்றாளர்களுக்கு எதிராக கடந்த 12ம் திகதி முதல் ...

Read More »