தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார் என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அடிப்படை உரிப்புரிமையிலிருந்தும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய குழு இன்று கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தகவலை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதேவேளை கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மட்டக்களப்பை சேர்ந்த தர்மலிங்கம் சுரேஸ் என்பவர் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal