மட்டக்களப்பில் திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உட்படவர்களுக்கு இரவேடு இரவாக நேற்று (25) இரவு அவர்களின் வீடுகளுக்கு சென்;று நீதிமன்ற தடை உத்தரவை காவல் துறையினர் கையளித்துள்ளனர்.
தியாகதீபம் திலீபன் நினைவு தினம் செய்வதற்கு தமிழ் தாயகமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரசில் தலைவர்கள் மற்றும் தமிழ் தேசிய பற்றாளர்களுக்கு எதிராக கடந்த 12ம் திகதி முதல் நினைவு தினம் செய்வதற்கு பொலிசார் நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்மந்தப்பட்டவர்களுக்கு அதனை கையளித்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவு தினத்தை செய்வதற்கு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட வழக்கையடுத்து அதனை செய்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து செல்வச் சந்நிதி ஆலயத்தில் இன்று (26) உண்ணாவிரத போராட்த்திற்கு ஒன்றினைந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தீர்மானித்து அறிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து செல்வச் சந்நிதி ஆலயத்தில் உண்ணாவிரதம் செய்வதற்கு நீதிமன்ற தடைஉத்தரவு பிறப்பிக்கபட்டது இதனையடுத்து வடக்கு கிழக்கில் திலீபனின் இறுதி தினமான இன்று (26) திகதி நினைவேந்தல் செய்வதற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது இதனையடுத்து கிழக்கில் மட்டக்களப்பில் திலீpபனின் நினைவேந்தல் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உட்பட்டவர்களுக்கு தடை உத்தரவு கையளிக்கப்பட்டதுடன் இன்று சனிக்கிழமை காவல் துறை அத்தியட்சர் காரியாலயத்துக்கு காலை 7 மணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில்காவல் துறை புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் இன்று காலையில் இருந்து ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது