கொவிட்-19: தடுப்புமருந்தானது பயன்பாட்டுக்கு வருவதற்குள் உயிரிழப்புகள் இரட்டிப்பாகும்!

உலகளவில் கொரோனாத் தொற்றுக்கான தடுப்புமருந்துகள் பரவலாக கிடைப்பதற்குள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்குமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 9 மாதங்களில் சுமார் 10 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்த நிலையில், அடுத்த 9 மாதங்களுக்குள் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா வினுடைய அவசரகால திட்ட இயக்குனர் மைக் ரியான்(Michael Joseph) தெரிவித்துள்ளார்.

மேலும் இது, தடுப்பு மருந்துத் தயாரிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகப் பெரிய சவால் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.