குமரன்

ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் – சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து

போலியான புகைப்படம் மூலம் ஆஸ்திரேலியா மீது போர் குற்றம் சுமத்திய விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக நியூசிலாந்து குரல் எழுப்பியுள்ளது. உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க பல நாடுகள் விரும்புகின்றன. அவற்றில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பது குறித்து சீனாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலுக்கு வித்திட்டது. இந்த மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய ...

Read More »

தலிபான் அமைப்பின் உறுப்பினரின் செயற்கை காலை பியர் குடிப்பதற்கு பயன்படுத்திய அவுஸ்திரேலிய படையினர்!

உயிரிழந்த தலிபான் உறுப்பினரின் செயற்கை காலை அவுஸ்திரேலிய படை வீரர்கள் பியர் ஊற்றிகுடிப்பதற்கு பயன்படுத்தியதை காண்பிக்கும் அதிர்ச்சி படமொன்றை கார்டியன் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் பிராந்தியத்தில் அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவி;ற்காக உருவாக்கப்பட்டிருந்த மதுபானசாலையில் உயிரிழந்த தலிபான் வீரரின் செயற்கை காலை பயன்படுத்தி அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் பியர்அருந்தும் படத்தையே கார்டியன் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அவுஸ்திரேலிய வீரர் இன்னமும் சேவையில் உள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது. இதேவேளை உயிரிழந்த தலிபான் வீரரின் செயற்கை காலுடன் இரு அவுஸ்திரேலிய வீரர்கள் நடனமாடும் படத்தையும் கார்டியன் வெளியிட்டுள்ளது. தலிபான் ...

Read More »

மைதானத்தில் திரைப்படப் பாணியில் அவுஸ்திரேலிய ரசிகையிடம் காதலைத் தெரிவித்த இந்திய ரசிகர்!

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தில், பார்வையாளர் அரங்கில், இந்திய ரசிகர் ஒருவர், அவுஸ்திரேலிய ரசிகையிடம் மோதிரமொன்றை வழங்கி திரைப்பட பாணியில் தனது காதலை தெரிவித்துள்ள சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி  அவுஸ்திரேலியாவுக்குச்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்தவகையில் இரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்றைய தினம்  நடைபெற்றது. இந் நிலையில் குறித்த போட்டியினைப் பார்வையிட வந்திருந்த இந்திய ரசிகர் ஒருவர், தனது தோழியான அவுஸ்திரேலிய ...

Read More »

மன்னாரில் இனங்காணப்பட்ட 4 கொரோனா தொற்றாளர்கள் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு

மன்னார் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் உரிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை மாலை விசேட அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சியில் அமைந்துள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் 3 பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள சவேரியார் புரத்தில் மீன் வாடி அமைத்து கடற்றொழிலில் ஈடுபட சிலாபத்திலிருந்து வந்தவர்களாவர். இவர்கள் கடந்த 19 ஆம் திகதி சிலாபத்திலிருந்து ...

Read More »

கிழக்கில் சூறாவளி ஏற்படும் சாத்தியம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும்

அண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது. 2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அத்தகைய கொடிய தாக்குதலை, தலிபான்களே தொடுத்தனர் என்பது அமெரிக்காவைச் சீண்டியது. அதனுடைய தொடர்ச்சியாகத் தலிபானுக்கு ...

Read More »

விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த காவல் துறை பாதுகாப்பு

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு காவல் துறை  பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.     படப்பிடிப்பை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் வருவதாக கூறப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை ...

Read More »

கொரோனா வைரஸ் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும்

கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக ஜெர்மனியில் உள்ள யுனிவர்சிடா டிஸ்ம் மெடிசின் அறக்கட்டளை ஆய்வு ஒன்றை நடத்தியது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 33 பேருடைய மூளை மாதிரிகளை சேகரித்து இந்த ஆய்வை ...

Read More »

சிறைவைக்கப்பட்டுள்ள அகதிக்கு தற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான நட்பைக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வாரமும் Taekwondo உடையுடன் காணொலி அழைப்பின் மூலம் அகதியான மோஸ்க்கு வகுப்பெடுக்கிறார் சிறுவனான கேலம். ஆஸ்திரேலிய அரசால் முதலில் மனுஸ் தீவிலும் பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடத்திலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருப்பவர் மோஸ். கேலமின் அம்மாவான ஜேனின் தொடர்பை 2014ல் கடிதம் எழுதும் ஒரு பிரச்சாரத்தின் மூலம் அகதியான மோஸ் பெற்றிருக்கிறார். “எப்போதும் எனக்கு ...

Read More »

ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் உள்ள ஈழ தமிழ் அகதி குடும்பம்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் தடுப்பிற்கு கொண்டு செல்லப்பட்ட ஈழ தமிழ் அகதி குடும்பம் ஆயிரம் நாட்களை தடுப்பு முகாமில் கடந்திருக்கிறது. கடந்த 2012 யில் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு ஆஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன. ஆஸ்திரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் ...

Read More »