உயிரிழந்த தலிபான் உறுப்பினரின் செயற்கை காலை அவுஸ்திரேலிய படை வீரர்கள் பியர் ஊற்றிகுடிப்பதற்கு பயன்படுத்தியதை காண்பிக்கும் அதிர்ச்சி படமொன்றை கார்டியன் வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் உருஸ்கான் பிராந்தியத்தில் அவுஸ்திரேலிய விசேட படைப்பிரிவி;ற்காக உருவாக்கப்பட்டிருந்த மதுபானசாலையில் உயிரிழந்த தலிபான் வீரரின் செயற்கை காலை பயன்படுத்தி அவுஸ்திரேலிய வீரர் ஒருவர் பியர்அருந்தும் படத்தையே கார்டியன் வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட அவுஸ்திரேலிய வீரர் இன்னமும் சேவையில் உள்ளார் என கார்டியன் தெரிவித்துள்ளது.
இதேவேளை உயிரிழந்த தலிபான் வீரரின் செயற்கை காலுடன் இரு அவுஸ்திரேலிய வீரர்கள் நடனமாடும் படத்தையும் கார்டியன் வெளியிட்டுள்ளது.
தலிபான் வீரர்களின் செயற்கை கால்களை பியர் அருந்துவதற்கு அவுஸ்திரேலிய படையினர் பயன்படுத்தினார்கள் என்ற தகவல்கள் முன்னர் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த படத்தை கார்டியன் வெளியிட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் இதனை சகித்;துக்கொண்டனர் கண்டிக்கவில்லை சிலவேளைகளில் அவர்களும் அவ்வாறு செயற்பட்டனர் என கார்டியன் தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்ட தலிபான் உறுப்பினரின் செயற்கை கால் வெற்றிச்சின்னமாக பேணப்ப்பட்டது ஆனால் அதனை எவரும் அகற்ற முடியாது என உத்தரவிடப்பட்டிருந்தது என கார்டியன் தெரிவித்துள்ளது.
2009 ஏப்பிரலில் மேற்கொள்ளப்பட்ட தலிபான் வீரரின் செயற்கை காலை அகற்றி அதனை தங்கள் முகாமில் உள்ள மதுபான சாலையில் வைத்திருந்தனர் அங்கு செல்பவர்கள் அதனை பயன்படுத்தி மது அருந்துவது வழமை என கார்டியன் தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal