குமரன்

ஜெனீவா மைய அரசியல் அல்லது வெளியாருக்காக காத்திருத்தல்

46 ஆவது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னும் பின்னுமாக தாயகத்திலும் டயஸ்போராவிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஜெனிவாவை மையமாகக் கொண்டு ஒரு போராட்டச் சூழல் தாயகத்திலும் டயஸ்போராவிலும் சிறிதளவுக்கு தமிழகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே கூடிக் கதைத்து புதிய கூட்டணிகளை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ஊடகங்கள் உருப்பெருக்கி சூடாக்கி விற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஜெனிவாவை நோக்கி ஒரு கொதிநிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியல் ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் இக்கட்டுரை பின்வரும் அடிப்படைக் கேள்விகளை  எழுப்புகிறது. ...

Read More »

பத்திரிகையாளர்கள் மீது கிருமிநாசினி தெளித்த தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா நேற்றுப் புதன்கிழமை தலைநகர் பாங்கொக்கில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 அமைச்சர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அமைச்சரவையில் வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு நியமிக்கும் சாத்தியமான தலைவர்கள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனால் விரக்தியடைந்த அவர், கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்கும் வகையில் தனது கையில் இருந்த கிருமிநாசினியை(சனிடைசர்) பத்திரிகையாளர்களின் முகத்துக்கு நேரே தெளித்தவாறு புறப்பட்டுச் சென்றார். பத்திரிகையாளர்களுடன் கோபமாகப் பேசியதுடன், அவர்கள் கூறுவதை காது கொடுத்துக் கேட்காமல் சென்றுவிட்டார். அவரது இந்தச் செயற்பாட்டை பார்த்து பத்திரிகையாளர்கள் திகைத்தனர். பிரதமர் பிரயுத் ...

Read More »

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக் கை எதிர்வரும் சனிக்கிழமை முதல் முன்னெடுக்கவுள்ளதாகத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் அடுத்தகட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப் பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது.   இந்நிலையில், கொரோனா தொற்றால் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகமாக உயிரிழப்பதாகத் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதனை கருத்திற்கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக பதில் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற இருவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்று இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார். போலி கடவுச் சீட்டு மற்றும் போலி விசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயன்ற பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று அதிகாலை கட்டு நாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

Read More »

ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈரானிய அகதியின் கதை

ஈரானிய அகதியான Ebrahim Obeiszade கடைசியாக பணியாற்றி 8 ஆண்டுகள் கடந்து விட்டன. தெற்கு ஈரானில் உள்ள சர்க்கரை ஆலையில் பணியாற்றிய அவரின் வாழ்க்கை இன்று ஆஸ்திரேலியாவில் வேறொரு கோணத்தில் உள்ளது. ஈரானில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஆஸ்திரேலியாவை நோக்கி கடல் பயணத்தை மேற்கொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளை தடுப்பு முகாம்களிலேயே/தடுப்பிலேயே கழித்திருக்கிறார். இவ்வாறான அகதிகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் ஏற்பட்ட திடீர் எண்ண மாற்றத்தால் இவர் 6 மாத தற்காலிக விசாவில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக, கடந்த ஜூலை ...

Read More »

யாழில் 11வது நாளாகவும் தொடரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம்..

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 11வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பலரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் கோரிக்கைகளாவன, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதினூடாக ...

Read More »

கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானம்

நேற்று நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் ஏப்.21, 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை விரைவில் செயற்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான பரிந்துரைகளை செயற்படுத்துவதில் யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க ஆயர்கள், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆய்வு செய்ததாகவும் அதன் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் கூறினர். குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள், ...

Read More »

தீவிரவாத வேலைதிட்டம் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது – விக்டர் ஐவன்

சிங்கள-பௌத்த இனவாத சித்தாந்தத்தின் அரசியல் இயக்கமொன்றாகவும் மற்றும் அதன் சமூகரீதியில் ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் இப்போது ஒரு வரலாற்று முடிவை எட்டியுள்ளன என்பதை வெளிப்படுத்த ‘தீவிரவாத சகாப்தத்தின் முடிவு’ என்ற தலைப்பில் கடந்த வாரம் பினான்சியல்டைம்ஸி ல் வெளியான கட்டுரை. கணிசமானஅளவுக்கு பொது வான விதத்தில் தூண்டிவிட்டதாகத் தெரிகிறது. இந்த கட்டுரையில், சிங்கள பௌத்தம் என்ற பெயரில், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பல்வேறு வடிவங்களில் செழித்து வளர்ந்து வரும் இந்த தீவிரவாத இனவாதம் அதன் வலுவின் உச்சத்தை எட்டிய அதே சமயம் ஒரு வரலாற்று ...

Read More »

ஜனாதிபதி முதலில் மனித உரிமைகள் பற்றிய படிப்புக்காக பாலர் பாடசாலை செல்லவேண்டும்

நாட்டை கட்டியெழுப்பவேண்டுமென்றால் மனித உரிமைகள் குறித்து கற்பதற்காக ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு செல்லவேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றியஉரையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்தள்ளதாவது வெளிநாட்டு நாணயத்துடன் தொடர்புபட்ட சகல விதமான விடயங்களும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் பல்வேறு விடயங்களில் தங்கியிருப்பதை நாம் உணரக்கூடியதாக உள்ளது. இவ் விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு முன்னர் இந்த விடயம் பற்றி மக்கள் மத்தியில் சில சந்தேகங்கள் காணப்படுகின்றன. அதைப் பற்றி நான் இங்கு கேட்க ...

Read More »

நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

சாய் பல்லவியின் தங்கை பூஜா, இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அப்படத்தில் இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். ...

Read More »