குமரன்

119 வருட அவுஸ்ரேலியாவின் சாதனையை முறியடித்தார் ரென்ஷா

20 வயதிற்குள் 500 ரன்கள் எடுத்து 119 வருட கால அவுஸ்ரேலியாவின் சாதனையை இன்றைய ராஞ்சி டெஸ்டில் முறியடித்துள்ளார் தொடக்க வீரர் ரென்ஷா. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அவுஸ்ரேலிய அணியின் இளம் தொடக்க வீரரான ரென்ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புனே, பெங்களூரு டெஸ்டில் அரைசதம் அடித்தார். இன்று ராஞ்சியில் தொடங்கிய போட்டியில் 44 ரன்கள் எடுத்தார். இவர் 11வது இன்னிங்சில் இந்த ரன்னை எடுத்துள்ளார். 21 ...

Read More »

கிரிக்கெட் போட்டியில் அடித்துக்கொண்ட வீரர்கள்- அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலியாவில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியொன்றின்போது, தன்னை ஆட்டமிழக்கச் செய்த பந்துவீச்சாளரின் செய்கையால் கோபமடைந்த துடுப்பாட்ட வீரர் அவரை மோதித் தள்ளிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘யக்கன்டன்டா’ மற்றும் ‘எஸ்க்டேல்’ ஆகிய இரண்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் போட்டியொன்று நடைபெற்றது. இதன்போது, யக்கன்டன்டா கழகப் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் எதிரணி துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்தார். இதையடுத்து பந்துவீச்சாளர் தனது வெற்றியைக் கொண்டாடும் முகமாக, ஆக்ரோஷமாகக் கத்தியபடியே துடுப்பாட்ட வீரருக்கு அருகே சென்றார். இதனால் கோபம் கொண்ட துடுப்பாட்ட வீரர் பந்துவீச்சாளரைத் ...

Read More »

கோலியின் குற்றச்சாட்டு தவறானது: கப்டன் ஸ்டீவ் ஸ்மித்

டி.ஆர்.எஸ். முறைக்காக ஓய்வறையில் இருந்தவர்களின் உதவியை நாடியதாக விராட் கோலி குற்றஞ்சாட்டுவது தவறானது என, அவுஸ்ரேலிய கப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய  கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன. புனே போட்டியை காட்டிலும் பெங்களூரு டெஸ்டில் இரு அணி வீரர்களும் அதிக அளவில் சீண்டிக் கொண்டனர். பெங்களூர் டெஸ்ட் போட்டியின்போது டிஆர்எஸ் முறையைப் ...

Read More »

நான் பொதுவான நபர் தான், ஆனால் பொது சொத்து கிடையாது – வித்யா பாலன்

இந்தி திரைப்படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி onRil , தற்போது நடித்து வரும் படத்தின் விளம்பரத்துக்காக சமீபத்தில் கொல்கத்தா சென்றிருந்தேன். அப்போது கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு ஆண் ரசிகர் என் அருகில் வந்து என் கையை பிடித்தார். பின்னர் என் தோளில் கையை போட்டார், நான் கையை எடுக்கும் படி கூறினேன். அதை அவர் கேட்காமல் திரும்பவும் அதே தவறை செய்தார். இது தவறு என அதட்டிய பின்னர் தான் அவர் ...

Read More »

ஒரே நாளில் வீடு கட்டிய முப்பரிமாண இயந்திரம்!

அழகிய வீட்டை, 24 மணி நேரத்திற்குள் கட்ட முடியுமா? ‘அபிஸ் கோர் 3டி’ என்ற வீடு கட்டும் முப்பரிமாண இயந்திரம் இருந்தால் போதும்! ரஷ்யாவில், ஸ்டுபினோ என்ற இடத்தில், உறைபனிக் காலத்தில், இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, அபிஸ் கோர் நிறுவனம். சிமென்ட் கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும், அபிஸ் கோர் 3டி இயந்திரம், 360 டிகிரி கோணங்களிலும் சுற்றிச் சுற்றி இயங்கும் திறன் கொண்டது. ஒரு கிரேன் மூலம், வீட்டுமனையில் கொண்டு போய் இந்த இயந்திரத்தை வைத்து, சிமென்ட் கலவையை குழாய் ...

Read More »

ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்த போது பதட்டமாக இருந்தது: சிபிராஜ்

தேசிய விருதுபெற்ற ஐஸ்வர்யா ராஜேசுடன் நடித்தபோது தனக்கு பதட்டமாக இருந்ததாக சிபிராஜ் கூறியுள்ளார். சிபிராஜ்- ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. அறிமுக இயக்குனர் மணி சேயோன் இயக்கியுள்ள இந்த படத்தில் சாந்தினி தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, லிவிங்ஸ்டன், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் மணி சேயோன் படம் பற்றி கூறும்போது, இது இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு மீனை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றார். சிபிராஜ் கூறும்போது, இந்த படத்தில் கதாநாயகன், ...

Read More »

அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (16) தொடங்குகிறது. இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று (16-ந்தேதி) தொடங்குகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் 333 ரன் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் ராஞ்சியில் நடைபெறும் 3-வது ...

Read More »

காபூலில் கடத்தப்பட்ட அவுஸ்ரேலிய சமூக சேவகி விடுதலை

காபூலில் கடத்தப்பட்ட அவுஸ்ரேலிய சமூக சேவகி, ஐந்து மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய சமூக சேவகி ஒருவர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த நிலையில் கடத்தப்பட்டு 5 மாதங்கள் கழிந்த நிலையில் நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை காபூல் நகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் பஷீர் முஜாகித் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அவர் பாதுகாப்பாக திரும்பி வருவதை ...

Read More »

மலேசியாவில் இருந்து அவுஸ்ரேலியா சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்

அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக சென்றிருந்த இலங்கையர்கள் குழுவொன்று விஷேட விமானம் மூலம் இன்று(15) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி நிஹால் ரணசிங்க கூறினார். இன்று அதிகாலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 25 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2016-10-31 அன்று விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்ற இவர்கள், அங்கிருந்து கடந்த ஜனவரி மாதம் ...

Read More »

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஹெட்போன் வெடித்ததால் பரபரப்பு

அவுஸ்ரேலியா நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயனர் ஒருவிரன் ஹெட்போன் வெடித்து சிதறிய சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. பீஜிங்கில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறந்து கொண்டிருந்த விமானத்தில் பேட்டரி மூலம் இயங்கும் ஹெட்போன் நடுவானில் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான பயணி ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டு கொண்டிருந்த நிலையில் திடீரென ஹெட்போன் வெடித்த சம்பவம் விமான பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணியின் ஹெட்போன் நடுவானில் வெடித்து சிதறியதில் பெண்மணியின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. வெடித்த ...

Read More »