குமரன்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி அவுஸ்ரேலியா விஜயம்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி (Ashraf Ghani) இன்று (திங்கட்கிழமை) அவுஸ்ரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் அவுஸ்ரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் உள்ள பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது, அவர் அவுஸ்ரேலியாவின் பிரதமர் மல்க்கம் டர்ன்புல்லை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பெண்களின் தரத்தை மேம்படுத்தல் ஆகிய முக்கிய விடயங்கள் குறித்து மல்க்கம் உடனான பேச்சுவார்த்தையின் போது அக்கறை செலுத்தப்படும் என சில உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

ஒளிப்படப் பகிர்வுச் செயலி

ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் ஒளிப்படங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான புதிய செயலியாக ‘வெப்லர்’ அறிமுகமாகியுள்ளது. ஆனால், இது வழக்கமான ஒளிப்படப் பகிர்வுச் செயலி அல்ல. இது சமூகத்தன்மை கொண்ட பகிர்வுச் செயலி. வெப்லர் மூலம் எடுக்கப்படும் படங்களை ஒரே இடத்தில் உள்ள குழுவினர் அனைவரும் ஒரே நேரத்தில் பகிர்ந்துகொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பம்சம். உதாரணத்திற்கு ஒரு திருமண நிகழ்வை எடுத்துக்கொள்வோம். எப்படியும் விருந்தினர்களில் பலர் திருமணக் காட்சியைப் பல கோணங்களில் ஸ்மார்ட்ஃபோனில் கிளிக் செய்வார்கள். அவற்றைப் பின்னர் ஃபேஸ்புக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்து கொள்ளலாம். எல்லாம் சரி, இப்படி ...

Read More »

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் நிலை என்ன?- இயக்குநர் மணிரத்னம்

சில காலங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தையிலிருந்த ‘பொன்னியின் செல்வன்’ நிலை என்ன என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காற்று வெளியிடை’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இறுதிகட்டப் பணிகளை முழுமையாக முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைக்கவே, ஏப்ரல் 7ம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக ...

Read More »

பருப்பு மிக்ஸி

பருப்பு மில்க் ஷேக் செய்வதை எளிதாக்குகிறது இந்த கருவி. பழச்சாறு மிக்ஸி போலவே பருப்புகளை அரைக்கிறது. அதோடு பால் சேர்த்தால் நிமிடத்தில் பருப்பு மிக்ல் ஷேக் தயாராகிவிடும்.

Read More »

அவுஸ்ரேலியாவில் வைத்தியராக ஆள்மாறாட்டம்!

நண்பரின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை திருடி அவுஸ்ரேலியாவில் வைத்தியராக நடித்து ஆள்மாறாட்டம் செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 30 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முட நீக்கியல் துறை நிபுணராக பணியாற்ற இந்தியாவை சேர்ந்த ஷியாம் ஆச்சாரியா என்பவர் கடந்த 2003-ம் ஆண்டு இந்நாட்டுக்கு வந்துள்ளார். 2003-ம் ஆண்டிலிருந்து 2014 வரை சுமார் 11 ஆண்டு காலம் அந்த மருத்துவமனையிலும் அவுஸ்ரேலியாவில் உள்ள மூன்று இதர மருத்துவமனைகளில் உதவி வைத்தியராக  பணியாற்றிய ஆச்சாரியா, அந்நாட்டின் ...

Read More »

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய விவகாரம்: வைகோ காவலில்

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார். இதனையடுத்து அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த ...

Read More »

அவுஸ்ரேலியா: சூறாவளி தாக்கிய பகுதிகளில் துப்புரவு பணிகள்

அவுஸ்ரேலியாவில் சூறாவளி தாக்கிய பகுதிகளில் பெரியளவிலான துப்புரவுப் பணிகள் நடந்துவருகின்றன.சூறாவளியில் குறைந்தது இரண்டு பேர் மாண்டனர்.மூன்று பேரைக் காணவில்லை. கடந்த வாரம் பெய்த கன மழையிலும் வீசியக் கடும் காற்றிலும் குவின்ஸ்லந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். சுமார் 770 மில்லியன் டாலர் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றுஅவுஸ்ரேலியக் காப்பீட்டு மன்றம் கணித்துள்ளது.

Read More »

அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அடுத்த வாரம் இந்தியா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பு ஏற்று அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் இந்தியா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு அவுஸ்ரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல்-ஐ சந்தித்தார். இந்தியா – அவுஸ்ரேலியா இடையிலான உறவுகளை பலப்படுத்தும் ...

Read More »

“பயணம் ஒரு ஆசிரியரைப் போன்றது“ – குல் பனாக்

‘பயணம் ஒரு ஆசிரியரைப் போன்றது. அது நமக்கு ஏராளமான பாடங்களை கற்பிக்கிறது’’ என்கிறார், பாலிவுட் நடிகையும், தொழிலதிபருமான குல் பனாக். பயணங்கள் குறித்து அவர் மேலும் பகிரும் வி‌ஷயங்கள்… ‘‘இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும் ஒரு ராணுவக் குடும்பத்தில் பிறந்தவள் நான். இயற்கையாகவே இடம் மாறிக் கொண்டே இருக்க வேண்டியிருந்தாலும், உல்லாசப் பயணத்துக்கும் எங்கள் குடும்பம் உரிய முக்கியத்துவம் கொடுத்தது. எனக்கு கஷ்டங்கள் வரும்போதெல்லாம் அவைகளில் இருந்து தப்பிக்க நான் பயணங்களை பயன்படுத்திக் கொண்டேன். அதாவது, பரீட்சைகள், பரீட்சை முடிவுகள், நெருங்கிய தோழிகளுடன் ஏற்படும் ...

Read More »

மைதிரியின் ஆலோசனையை நிராகரித்த முதலமைச்சர்கள்!

அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தல்களை ஒரே நாளில் நடாத்து என்ற மைத்திரிபால சிறிசேனவின் யோசனையை அனைத்து மாகாண முதலமைச்சர்களும் நிராகரித்துள்ளனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முதலமைச்சர்களுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, அனைத்து மாகாணசபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் யோசனையை சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்தார். இந்த திட்டம், சில மாகாணசபைகளை முன்கூட்டியே கலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும். இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன், சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாணசபைகளுக்கான பதவிக்காலம் முடிவடையவுள்ளது. மத்திய, மற்றும் வடக்கு மாகாணசபைகளின் பதவிக்காலம் ...

Read More »