இயக்குநர் ஹரி காவல் துறை கதைகளை கொமர்ஷல் அம்சங்களுடன் படமாக்கி வெற்றிக் காண்பதில் வல்லவர். இவர் தற்போது 2003 ஆம் ஆண்டில் இவரது இயக்கத்தில் வெளியான ‘சாமி ’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார். இதில் விக்ரமுடன் திரிஷாவும் நடிக்கவிருப்பதாக பேச்சு இருந்தது. தற்போது விக்ரமுடன் மற்றொரு நடிகையும் ஜோடியாக நடிக்கவிருக்கிறாராம். இதற்காக நடிகை கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் அவர் தன்னுடைய கேரக்டரைக் கேட்டுவிட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று ...
Read More »குமரன்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்! புதிதாக குற்றங்கள் சேர்ப்பு!
74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் பல புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் அனைத்து சொத்துக்களும் அரசுடமையாக்கப்படும். அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த சட்டம் பழைய பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதனை தவிர இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் செயற்படுவது குற்றமாகும். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் ...
Read More »அவுஸ்ரேலியாவில் குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு விமான பயணி வழக்கு
குண்டு மனிதர்கள் இடையே இருக்கை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக ரூ.50 லட்சம் நஷ்டஈடு கேட்டு விமான பயணி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள உலாங் காங்கை சேர்ந்தவர் மைக்கேல் அந்தோனி டெய்லர். இவர் அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிட்னியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையின் இருபுறம் உடல் குண்டான மனிதர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் அவருக்கு அசவுகரியம் ஏற்பட்டது. கழிவறைக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டார். 14 மணி நேரம் பயணம் ...
Read More »இணைய அட்லஸ் தெரியுமா?
சமீபத்தில் ஒரு வரைபடம் இணைய உலகினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வரைபடம் இணையத்துக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. உலகின் முதல் இணைய அட்லஸ் என இது அழைக்கப்படுகிறது. இணையத்தின் பெளதீக உள்கட்டமைப்பை விவரிக்கும் வகையில் இந்த வரைபடம் அமைந்துள்ளது. இணையம் என்பது வலைப் பின்னல்களின் வலைப் பின்னல் என்பது நமக்குத் தெரியும். அது உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களாகவும் சர்வர்களாகவும் பரவியிருக்கிறது. டேட்டா சென்டர்களால் இணைக்கப்பட்டு, கடலுக்கடியிலான கேபிள்களும் அதன் இணைப்புகளாக அமைந்துள்ளன. ஆனால், இந்த பெளதீக உள்கட்டமைப்பின் விவரம் மிகவும் சிக்கலானது. இந்த விவரங்களைச் சித்தரிக்கும் வரைபடத்தை ...
Read More »பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான பி.வி.சிந்துவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதை பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சோனு சூட் உருவாக்குகிறார். இதுகுறித்துப் பேசிய சோனு சூட், ”சிந்துவின் வாழ்க்கையைப் படமாக்குவதில் மிகுந்த மகிழ்ச்சி. இப்படம் லட்சக்கணக்கான இந்தியர்களை ஊக்கமடையச் செய்த ஒரு பெண்ணின் கதை. பெரிதாய்க் கனவு காணுங்கள்; கனவோடு நிற்காமல் கடுமையாக உழைத்து அதை அடையுங்கள் என்னும் செய்தியைத் தாங்கி நிற்பவரின் கதை. அனைவரும் அவசியம் அறிந்து, ஊக்கமடைய வேண்டிய பயணம் இது” என்று கூறியுள்ளார். ஹைதராபாத்தில் பிறந்தவர் ...
Read More »அகதிகளை அவுஸ்ரேலியா அழைக்கலாம்!
அவுஸ்ரேலியாவில் முதன்முறையாக, மனிதாபிமான விசாக்களில் (humanitarian visas) அகதிகளைத் தனியார் தொழில் நிறுவனங்கள் அழைக்கும் திட்டம் ஒன்று ஜூலை 1ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தனியார் நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் அனுசரனை அதாவது sponsor செய்தால், சுமார் 1000 வரையிலான அகதிகளை இங்கு அழைக்கும் ‘தனியார் sponsorship’ திட்டமொன்றை அவுஸ்ரேலிய அரசு கொண்டுவருகிறது. தேவைப்படும் பட்சத்தில், Centrelink பணம் ஏதாவது அக்குறிப்பிட்ட அகதி எடுக்க நேரிட்டால் அப்பணத்தையும் sponsor செய்த தனி நபரோ அல்லது நிறுவனமோ அல்லது சமூகக் குழுவோ மீளச் ...
Read More »சிறீலங்காவின் புதிய அரசியல் யாப்பு தமிழருக்கான சர்வரோக நிவாரணி!?
எஞ்சியிருக்கும் தமிழரையும் ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களுக்கு விமோசனம் வழங்கத் தயாரென மகிந்த அறிவித்துள்ளார். அவரது அகராதியில் விமோசனம் என்பதன் அர்த்தம் தமிழர்களை மறுஉலகுக்கு அனுப்பி வைப்பதே. இலங்கையில் இந்த மாதம் முதலாம் திகதி ஆங்காங்கே நடைபெற்ற மே தினக் கூட்டங்களின் முழக்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் ஏறுமாறாகவும், எதிர்கால எதிர்வுகூறலாகவும் எடுப்புத் தொடுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பித்தளை முலாம் பூசப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் தலைமையிலான நீலக்கட்சி இரண்டு அணியாகப் பிளவுபட்டு, தமக்குள் மோதிக் கொண்ட மிகப்பெரிய பகிரங்க நிகழ்வாகவும் மாறிக் கொண்டது இதிலுள்ள முக்கியம். நீலக் ...
Read More »‘விஸ்வரூபம்-2’ படக்குழுவின் அடுத்த அதிரடி திட்டம்
கமலின் ‘விஸ்வரூபம்-2’ படக்குழுவினர் அடுத்ததாக அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். கமல் நடிப்பு, இயக்கம் என உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஒருவழியாக இந்த வருடத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கமல். விஸ்வரூபம் படம் எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்திற்கும் உண்டான சில காட்சிகளை படமாக்கிவிட்டதாக கமல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் வெளியான பிறகும் மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கிவிட்டு, இறுதிக்கட்ட பணிகளில் இறங்கினார். விஸ்வரூபம்-2 க்கான படப்பிடிப்பு இன்னும் 1 நாட்கள் பாக்கி இருக்கிறதாம். ஆகவே, அந்த 10 நாட்கள் படப்பிடிப்பையும் விரைவில் நடத்தி ...
Read More »அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்ற மீண்டும் இணக்கப்பாடு
அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான ஒரு இணக்கப்பாடு மீண்டும் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம்(4) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கமன் டேர்ன்புல்லுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது டொனால்ட் ட்ரம்பினால் முன்னர் நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை முன்கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தினால் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இதற்கான ஒப்பந்தம் முன்னர் செய்து கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் மானஸ் மற்றும் நவுறு தீவுகளின் முகாம்களில் உள்ள 1200 அகதிகளை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பட்டிருந்தது.
Read More »சுவாரசியமான ஒளிப்படச் செயலி
ஸ்மார்ட் போன் உலகில் இப்போது ஒளிப்படம் சார்ந்த செயலிகள் பிரபலமாகவும், சுவாரசியமாகவும் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது பேஸ் ஆப் செயலி அறிமுகமாகி இருக்கிறது. செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட இந்தச் செயலி பயனாளிகளின் ஒளிப்படத்தைப் பலவிதமாக மாற்றிக்கொள்ள உதவுகிறது. ஒருவர் தனது எதிர்காலத் தோற்றத்தை, புன்னகை மிக்க தோற்றத்தைக் காணலாம். பாலினத்தை மாற்றியும் பார்த்துக்கொள்ளலாம். இளம் வயதுத் தோற்றத்தையும் காணலாம். இந்தச் செயலியை வேறு பல விதங்களிலும் சுவாரசியமாகப் பயன்படுத்தலாம். ஏற்கெனவே உள்ள ஒளிப்படங்களைத் திருத்த அல்லது புதிதாக எடுத்த படத்தை மாற்றவும் ...
Read More »