சூரிய மின் தகடுகளில், ஏதாவது ஒரு புதுமை, மாதத்திற்கு ஒன்று வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், பிரிட்டனைச் சேர்ந்த, ‘ரெனோவாஜென்’ என்ற நிறுவனம், பாய் போல விரிக்கக்கூடிய, சூரிய ஒளி மின் கருவியை உருவாக்கி உள்ளது. ‘ரேப்பிட் ரோல் சோலார் பி.வி.,’ என்றழைக்கப்படும், இந்த சூரிய மின் பாயை, பிரிட்டனின், சிறிய தீவான, பிளாட் ஹோம் ஐலண்டில் நிறுவி உள்ளது, ரெனோவாஜென். சுற்றுலா பயணியர் வந்து போகும் இந்தத் தீவிற்கான மின்சாரத்தை, இரு டீசல் ஜெனரேட்டர்களை வைத்தே உற்பத்தி செய்தனர். இங்கு, ரேப்பிட் ரோல் ...
Read More »குமரன்
உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும்
உலகில் உள்ள பல்கலைக்கழகங்கள் அகதிகளின் கல்விக்கு மேலும் பல உதவிகளை வழங்க வேண்டும் என போர்த்துக்கள் நாட்டின் தூதுவர் ஹெலனா பரோகோ கோரிக்கை விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற சர்வதேச உயர்கல்வி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர் “அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்க உயர்கல்வி அடிப்படையானது. அவர்களே நாட்டினை மீண்டும் கட்டியெழுப்பக் கூடியவர்கள். நெருக்கடியில் இருக்கும் அகதிகள் இளைய சமுதாயத்திற்காக நாம் முதலீடு செய்யவில்லை என்றால் போரால் அழிவுண்ட நாடுகளை யார் மீண்டும் கட்டியெழுப்புவார்கள். 150 ...
Read More »கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை!
கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்க முதலீட்டாளர்களிடமிருந்து மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுமென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. இதற்கு முன்னரும் இந்த கப்பல் சேவையை நடத்த விண்ணப்பங்கள் கோரப்பட்டபோதும் அதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைக்காததால் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களை அதிகரிக்க முடியுமென்றும் அமைச்சு தெரிவிக்கின்றது.
Read More »அவுஸ்ரேலியாவில் அனுப்பப்படாத குறுஞ்செய்தி அதிகாரபூர்வ உயிலாக
இறந்த நபர் ஒருவரின் செல்பேசியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனுப்பப்படாத குறுஞ்செய்தி ஒன்றை அவரது அதிகாரபூர்வ உயிலாக அவுஸ்ரேலிய நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தன் 55-ஆம் வயதில் இறந்த அந்த நபர், தனது சகோதரருக்கும், சகோதரரின் மகனுக்குமே தனது சொத்துகள் அனைத்தும் சேரும் என்று ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சு செய்து, அதில் அவரின் சகோதரரின் செல்பேசி எண்ணையே பெறுநருக்கான இடத்திலும் நிரப்பியுள்ளார். ஆனால், அந்தச் செய்தியை அனுப்பாமல் தன் செல்பேசியில் வரைவாகச் சேமித்து வைத்திருந்தார். கடந்த ஆண்டு அவர் தற்கொலை செய்துகொண்ட பின் அந்த செய்தி அவரது ...
Read More »‘மெர்சல்’ இன்னும் தணிக்கையாகவில்லை!
அது என்னமோ தெரியவில்லை, விஜய்யின் படம் ரிலீஸாகும் போது ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து கொண்டு இருக்கின்றன. காவலன், துப்பாக்கி, தலைவா, கத்தி, புலி என தொடர்ந்த பிரச்னை இப்போது மெர்சலிலும் தொடர்கிறது. இதுநாள் வரை மெர்சலுக்கு தலைப்பு பஞ்சாயத்து மற்றும் கேளிக்கை வரி தொடர்பான பஞ்சாயத்தால் படம் ரிலீஸாகுமா, ஆகாது என்ற நிலை நீடித்தது. தற்போது அந்த பிரச்னைகள் எல்லாம் தீர்வாகி மெர்சல் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்னை வந்துள்ளது. மெர்சல் படத்திற்கு தணிக்கை ...
Read More »மொழி பெயர்க்கும் திறன் கொண்ட, ‘பிக்செல் பட்ஸ்’
மென்பொருள், வன்பொருள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்தால், போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ள முடியும் என, ‘கூகுள்’ நினைக்கிறது. அதற்கான முதல் படியாக, ‘பிக்செல் பட்ஸ்’ என்ற காதணி ஒலிபெருக்கியை, ‘கூகுள்’ வெளியிட்டிருக்கிறது. இதன் விலை, 13,680 ரூபாய். இது, வெறும் ஒலிபெருக்கியல்ல. 40 மொழிகளில், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மொழி பெயர்க்கும் திறன் கொண்டது. ஆனால், இந்தத் திறன், பிக்செல் பட்சுக்குள் இல்லை. அதிதிறன் வாய்ந்த, செயற்கை நுண்ணறிவு மென்பொருளை கொண்டு இயங்கும், ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ சேவை, இதற்கு பயன்படுகிறது. அதிலிருந்து கிடைக்கும் மொழி பெயர்ப்பை, ...
Read More »கறுப்புக்கொடிகாட்டிய சிவாஜியின் கையைப் பிடித்தார் மைத்திரி!
அரசியல் கைதிகளின் வழக்குகளை இடம்மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதற்கு தீர்வு வழங்காத ஜனாதிபதியின் யாழ் வருகையைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். இந்துக்கல்லூரிக்கு முன்பாக இன்று(14) வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினரின் போராட்ட இடத்தில் வைத்துதே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் கறுப்புக்கொடியுடன் நின்றவர்களைக் கண்டு காரில் இருந்து இறங்கிவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை நோக்கி கும்ப்பிட்டவாறு வந்தார். ஜனாதிபதிக்குக் ...
Read More »சிட்னி நோக்கி 349 பயணிகளுடன் சென்ற எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்
அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அபிதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு எத்திஹாட் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்த விமானத்தில் 349 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் இன்று அதிகாலை அவுஸ்ரேலியா வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்து புகை வெளியேறியதைக் குறிக்கும் எச்சரிக்கை விளக்கு எரிந்தது. இதனைக் கவனித்த பைலட், விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என நினைத்து, அருகில் உள்ள அடிலெய்டு விமான நிலையம் ...
Read More »ஸ்டோக்ஸ் வராவிட்டால் அவுஸ்ரேலியா வெற்றி பெறும்: ஸ்டீவ் வாக்
ஸ்டோக்ஸ் வராவிட்டால் ஆஷல் தொடரை அவுஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வெல்லும் என அந்த அணியின் முன்னாள் கப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவித்துள்ளார். வருகிற 28-ந்திகதி அவுஸ்ரேலியாவுக்கு புறப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்-ரவுண்டரும், துணை கப்டனுமான பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய விவகாரத்தில் காவல் துறை விசாரணையில் சிக்கியுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து அணியில் இருந்து தற்போதைக்கு விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் ...
Read More »தமிழ் கற்க ஆர்வமாக இருக்கிறேன்: ஷாலினி பாண்டே
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருக்கும் ஷாலினி பாண்டே, தமிழ் கற்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் ஷாலினி பாண்டே. இவர், ‘100 பிரசன்ட் காதல்’ என்ற தமிழ் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகி இருக்கிறார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘100 பிரசன்ட் லவ்’ படத்தின் ரீமேக். ஜி.வி.பிரகாஷ்- ஷாலினி பாண்டே நடிக்கும் ‘100 பிரசன்ட் காதல்’ படத்தை ...
Read More »