குமரன்

அவுஸ்திரேலியாவின் உயரமான மலைச்சிகரத்தில் ஏறி சாதனை! 8 வயது இந்திய சிறுவன்!

அவுஸ்திரேலியாவின் உயரமான மலைச் சிகரத்தில் ஏறி தெலுங்கானாவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் சாதனைப் படைத்துள்ளான். இந்தியா, ஐதராபாத்தைச் சேர்ந்த சமன்யு பொத்துராஜ்(8) என்ற சிறுவன், அவுஸ்திரேலியாவின் மிக உயரமான மலையான கொஸ்கியஸ்கோவின் மீது ஏறி சாதனை படைத்துள்ளான். சமன்யு கடந்த 12ஆம் திகதி தனது தாய், சகோதரி உட்பட 5 பேருடன் இந்த மலையில் ஏறி இந்த சாதனையை படைத்தான். ஏற்கனவே, தான்சானியாவில் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 5,895 அடி உயரம் கொண்ட மலைச் சிகரத்தில் ஏறி இந்த சிறுவன் சாதனை ...

Read More »

திரை விமர்சனம்: மாரி 2

மாஸ் ரவுடியான தனுஷை (மாரி) இன்னொரு ரவுடி கும்பல் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறது. தனது துணிச்சலான வியூகத்தால் 100-வது முறையும் அதில் இருந்து தப்பிக்கிறார் தனுஷ். இதை அவரது நண்பர்கள் கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் ஆகியோர் பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் சாய் பல்லவிக்கு மாரி மீது காதல் மலர்கிறது. தான் ஒரு ரவுடி, அதுவும் எப்போதும் எதிரிகளால் குறிவைக்கப்படும் ரவுடி என்பதை மாரி பலமுறை கூறியும் விடாமல் காதலிக்கிறார் சாய் பல்லவி. இந்த சூழலில், தன் அண்ணனைக் கொன்ற ...

Read More »

52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள்!

மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு நிலைகளை மீளச் சிந்திக்கவும் மீட்டுப் பார்க்கவும் மீள உருவாக்கவும் வேண்டிய தேவை இருக்கிறது.’   –   பேராசிரியர்.மைத்ரி விக்ரமசிங்க(ரணில் விக்ரமசிங்கவின் துணைவி) 52 நாள் ஆட்சிக் கவிழ்ப்பு நாடகம் முடிவிற்கு வந்துவிட்டது. இதன் விளைவுகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.   முதலாவது விளைவு- மைத்திரியை அது நவீன துக்ளக் மன்னனாக வெளிக்காட்டியிருக்கிறது. இலங்கைத்தீவை இதுவரையிலும் ஆண்ட அனைத்துத் தலைவர்களிலும் அதிகம் பரிகசிக்கப்பட்ட கேவலமாக விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவராக ...

Read More »

மேற்கு இந்தோனேசியாவை தாக்கிய சுனாமி அலை: 43 பேர் பலி- 500-க்கும் மேற்பட்டோர் காயம்!

மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் உள்ள கடற்கரை பகுதியான சுந்தா ஸ்ட்ரேய்ட் பகுதியில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.27 மணிக்கு திடீரென சுனாமி அலை தாக்கியது. இந்த தாக்குதலுக்கு பாண்டேக்லாங்க், செராங் மாவட்டங்களும் உள்ளானது. இதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஹோட்ட்கள், 10 படகுகள் சேதமடைந்தது. அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் ...

Read More »

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: மெல்போர்னில் பயிற்சியை தொடங்கிய இந்திய வீரர்கள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெர்த் டெஸ்ட் 18-ந்திகதி முடிவடைந்த நிலையில், இந்திய வீரர்கள் இன்று மெல்போர்னில் பயிற்சியை தொடங்கினார்கள். பெர்த் டெஸ்ட் கடந்த 14-ந்திகதி முதல் 18-ந்திகதி வரை நடைபெற்றது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என அழைக்கப்படும் 3-வது போட்டி மெல்போர்னில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் தொடங்குகிறது. இரண்டு டெஸ்டிற்கும் இடையில் சுமார் 8 நாட்கள் இடைவெளி உள்ளது. 18-ந்திகதி பெர்த்தில் முடிந்த டெஸ்டிற்குப்பின் இந்தியா பயிற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர். மெல்போர்ன் மைதானம் ...

Read More »

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முயற்சி!

அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் ஜனாதிபதியுடன் சேர்த்து 32 அமைச்சர்கள் காணப்படவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டின் அடிப்படையில் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதால் இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பொன்றின் போதே ஐக்கியதேசிய கட்சி இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலானஐக்கியதேசிய கட்சியின் நால்வர் கொண்டகுழுவினர் சில நாட்களிற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து ...

Read More »

மன்னார் மனித எலும்புக்கூடு : பரிசோதனைக்காக வெளிநாடு கொண்டுசெல்ல நடவடிக்கை!

மன்னர் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளிலிருந்து அதன்  மாதிரிகள் பரிசோதனைக்கு கொழும்பிற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில், கடந்த   புதன் கிழமை முதல்   மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு வந்துள்ளன. 6 மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மன்னார் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமையுடன் 121 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.   தற்போது வரை ...

Read More »

அவுஸ்திரேலியா சென்ற இராட்சத விமானம் கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கம்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானம் ஒன்று இன்று (22) அதிகாலை 5.30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி பயணிக்கும் போது, குறித்த விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் இவ்வாறு விமானத்தை தரையிறக்க நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போது குறித்த விமானத்தில் 490 பயணிகள் மற்றும் 22 ஊழியர்கள் பயணித்துள்ளனர். விமானத்தில் சுகயீனமடைந்த பயணி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ...

Read More »

அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்!

அமெரிக்காவில் அரசின் செலவின மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால், அரசு நிர்வாகப் பணிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் டிரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதி மசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது. நிர்வாக முடக்கம் காரணமாக 8 லட்சம் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். அல்லது அவர்கள் ஊதியம் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நிர்வாக ...

Read More »

நேசத்தின் ஞானத்தைச் சொன்னவர்!

ஒர் இனிமையான கற்பனையைச் செய்துகொள்ளுங்கள். கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் செல்லும் காலத்தில் 24 மணி நேரத்துக்குமேல் நீங்கள் சஞ்சரிக்கமுடியாது. இந்தக் கால அவகாசம் போதும் என்று அதில் பயணிப்பதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு, ஏறி அமர்ந்துவிட்டீர்கள். எந்திரத்தில் இருந்த ‘காலம் காட்டி’யில் ’இயேசு பிறந்திருந்த தினம்’ என டைப் செய்துவிட்டீர்கள். இயந்திரம் புறப்பட்டுவிட்டது. 2018 ஆண்டுகள் பின்னோக்கிப் பயணித்ததை உங்கள் உடல் உணர வில்லை. ஆனால் இயந்திரத்தின் கதவு திறந்தபோது உங்கள் உள்ளம் அதை உணர்ந்துவிட்டது. அதுவரை நீங்கள் உணர்ந்திராத உற்சாகமும் மகிழ்ச்சியும் உங்களைச் ...

Read More »