கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் உலகின் மிகப்பெரிய விமானமான ஏ380 ரக விமானம் ஒன்று இன்று (22) அதிகாலை 5.30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி பயணிக்கும் போது, குறித்த விமானத்தில் பயணித்த ஒருவர் திடீர் சுகயீனமடைந்தமையினால் இவ்வாறு விமானத்தை தரையிறக்க நேரிட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது குறித்த விமானத்தில் 490 பயணிகள் மற்றும் 22 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
விமானத்தில் சுகயீனமடைந்த பயணி கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய மத்திய நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் மேலதிக வைத்திய சிகிச்சைக்காக நீர் கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது 80 லட்சம் ரூபாய் பெறுமதியிலான விமான எரிபொருள் 70000 லீற்றர் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் நிவைடைந்த பின்னர் காலை 7.40 மணியளவில் அவுஸ்திரேலியா சிட்னி நகரம் நோக்கி விமானம் பயணித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Eelamurasu Australia Online News Portal