கல்முனை பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து கால அவகாசத்தை வழங்கப் பார்க்கின்றது. அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். அத்துடன் உண்ணாவிரதிகளின் கோரிக்கைக்கு ஆத்மார்த்தமான ஆதரவை வழங்குவதோடு கல்முனை கள நிலைமைகளை நேரில் அறிவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் செல்லவேண்டும் என்றும் கோரியுள்ளார். கனடா ‘வாணிபம்’ வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் ‘அன்பகம் ‘ மூதாளர் மாதாந்த ...
Read More »குமரன்
அவுஸ்திரேலியாவில் அமுலுக்கு வரும் புதிய தடை!
lightweight, single-use- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்கு வருகிறது. விக்டோரியா மாநிலத்தில் இந்த தடை நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் , துரித உணவு விற்பனை நிலையங்கள், மற்றும் எரிபொருள் சேவை நிலையங்கள் ஆகியவற்றில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஆனால் பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பாவிக்க தடை இல்லை. பிளாஸ்டிக் மாசுபாட்டினை குறைப்பதற்கு பல வழிகளில் ...
Read More »பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களா?
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 15 பிரபலங்கள் கலந்து கொண்டு, 100 நாட்கள் ஒரே வீட்டில் வசிப்பார்கள். இறுதியில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும். இந்தியில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்கள் ...
Read More »நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகு!
கடந்த ஜனவரி மாதம் கேரளாவிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்று 243 பேருடன் காணாமல் போன இந்திய படகை கண்டறிய அவ்வழியே உள்ள சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 12ஆம் திகதி அன்று தேவ மாதா என்ற படகு மூலம் கேரளாவின் முன்னாபம் பகுதியிலிருந்து நியூஸிலாந்தை நோக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் பயணத்தை தொடங்கி யிருந்தனர். பயணத்தை தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட பின்னரும் அவர்களின் இருப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இது தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை ...
Read More »தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் அடக்கம்!
நீர்கொழும்பு கட்டுவபிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை தாக்குதலை நடத்திய தற்கொலைதாரியான முஹம்மத் ஹஸ்தூனின் தலை மற்றும் உடற்பாகங்கள் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன. இதன்போது பிரதேச செயலக அதிகாரிகள், அங்குருகாரமுல்ல கிராம சேவகர், பொலி ஸார் ஆகியோர் உடன் இருந்தனர். எந்தவித சமய அனுஷ்டானங்களும் இடம்பெறாமல் தற்கொலைதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் பலகையிலான சீல்வைக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டன. தற்கொலை தாக்குதல் ஏப்ரல் 21 ஆம் திகதி ...
Read More »இலங்கையில் தாக்குதல் இடம்பெற்றமை ஐஎஸ் தலைமைக்கு எவ்வாறு தெரியவந்தது?
ஐஎஸ் அமைப்பு இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உண்மையில் இவ்வாறான தாக்குதலொன்று இடம்பெற்றது ஆரம்பத்தில் அந்த அமைப்பிற்கு தெரியாது என விசாரணைகளுடன் தொடர்புடைய அதிகாரியொருவர் இந்து நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர் உள்நாட்டை சேர்ந்த ஐஎஸ் ஆதரவாளர் ஒருவர் ஐஎஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை தொடர்புகொண்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள அந்த நபர் ,மூன்றாம் தரப்பொன்றின் மூலமாக, தங்கள் உயிர்களை தியாகம் செய்த ஜிகாத் தீவிரவாதிகளை ஐஎஸ் அங்கீகரிக்கவேண்டுமென மன்றாட்டமாக கேட்டுக்கொண்டுள்ளார் ...
Read More »இந்தோனேசியாவில் பாரிய தீ விபத்து : 30க்கும் மேற்பட்டோர் பலி!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். இந்நிலையில் திடீரென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீயினை கட்டுப்படுவதற்கான தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,சம்பத்தில் காயடைமந்த தொழிலாளர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லையென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 2017 ஆம் ...
Read More »அவுஸ்திரேலியாவில் முதலாவது கருணைக்கொலைக்கு விண்ணப்பித்த தாயார்!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலை குறித்த சட்டம் நடப்புக்கு வந்துள்ளது. பெரும்பாலான நாடுகளில் கருணைக் கொலை தடைசெய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு அதனை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்களை விக்டோரியா மாநிலம் அறிமுகப்படுத்தியது. அது துணிச்சலான மாற்றம் என்று வர்ணிக்கப்படுகிறது. கருணைக் கொலைக்கு அனுமதி பெற வேண்டுமெனில், கடும் நோய் கொண்ட மூத்தோராகவோ, உயிர் வாழும் காலம் ஆறு மாதத்துக்கும் குறைவாகவோ இருக்கவேண்டும் போன்ற சில நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும். சில பாதுகாப்பு நடைமுறைகளும் அதற்காகச் செயல்படுத்தப்படவுள்ளன. தன்னிச்சை மறுஆய்வுக் குழுவினர், மரண விசாரணை நீதிபதி ஆகியோர் ...
Read More »அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் ?
ஐ.எஸ் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் அதிக அக்கறைகள் எழுந்துள்ளன. தற்போது முழு நாட்டிற்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டம் என்ற விடயம் பேசப்பட்டு வருகிறது. இது எந்தளவுக்கு சாத்தியப்படப் போகின்றது என்பது தெரியவில்லை. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்குப்பிறகு முஸ்லிம்கள் அணியும் ஆடைகள் தொடர்பில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. பின்பு அரச நிறுவனங்களில் அணியக்கூடிய ஆடைகள் தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று வந்தது. அதற்கு மனித உரிமை ஆணைக்குழு தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். வௌிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் ...
Read More »ஹூவாய் ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட்!
ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ இயங்குதள அப்டேட் வழங்கப்படுகிறது. ஹூவாய் நிறுவனத்தின் பி30 ப்ரோ மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அனைத்து ஹூவய் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்கள் தொடர்ந்து வழங்கப்படும். எங்களது பிரபல பி30 சீரிஸ் மாடல்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ பெற முடியும் என ஹூவாய் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்துள்ளது. புதிய அறிவிப்பு ஹூவாய் பி30 ப்ரோ, ஹூவாய் பி30, மேட் ...
Read More »