இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திடீரென பரவிய தீ தொழிற்சாலை முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தீயினை கட்டுப்படுவதற்கான தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு விரைந்ததோடு,சம்பத்தில் காயடைமந்த தொழிலாளர்களையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் குறித்த தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டுப்பிடிக்கவில்லையென அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டு தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal