lightweight, single-use- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்கு வருகிறது.
விக்டோரியா மாநிலத்தில் இந்த தடை நவம்பர் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறிப்பாக பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் , துரித உணவு விற்பனை நிலையங்கள், மற்றும் எரிபொருள் சேவை நிலையங்கள் ஆகியவற்றில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பாவனைக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
ஆனால் பழங்கள் மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளை பாவிக்க தடை இல்லை.
பிளாஸ்டிக் மாசுபாட்டினை குறைப்பதற்கு பல வழிகளில் அரசு தொடர்ந்து ஈடுபடும் என விக்டோரியா மாநில சுற்றுசூழல் அமைச்சர் Lily D’Ambrosio கூறியுள்ளார்.
ஆனால் அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளின் பாவனைக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக காகித பைகள் பாவிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என Boomerang Alliance என்ற சுற்றுசூழல் அமைப்பை சேர்ந்த Jeff Angel வலியுறுத்தியுள்ளார்.