தமிழ் மக்கள் பேரவையின் ஏற் பாட்டில் நாளை மறுதினம் சனிக் கிழமை (24-09- 2016) நடைபெற இருக்கும் எழுக தமிழ் மாபெரும் பேரணி யில் அனைவரும் கலந்துகொள்ளும்வகையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மற்றும் நிறு வனங்களைப் பூட்டி பேரணிக்குஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக் கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் நேற்றிரவு விடுக்கப் பட்ட விசேட செய்திக்குறிப்பில் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Read More »குமரன்
மன சுமையை குறைக்க உதவும் கருவி!
மனச் சுமை சார்ந்த உளவியல் மற்றும் உடலியல் சிக்கல்களுக்கு, பக்கவிளைவுகள் உள்ள மருந்து களுக்கு பதில் மாற்று சிகிச்சை முறைகள் சில வந்துள்ளன. அவற்றில், ‘நியூரோ பீட்பேக்’ இப்போது மீண்டும் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. ஆனால், மூளைக்கு உள் நடுப்பகுதியில் பாதாம் பருப்பு வடிவில் உள்ள, ‘அமிக்டாலா’ என்ற பகுதியில் தான் மனிதனின் நவரச உணர்வுகளும் உற்பத்தியாகின்றன. இந்தப் பகுதியின் செயல்பாட்டை வழக்கமான இ.இ.ஜி., கருவி மூலம் துல்லியமாக கண்காணிப்பது முடியாத காரியமாக கருதப்பட்டு வந்தது. இதற்கு, மருத்துவர்கள் எப்.எம்.ஆர்.ஐ., எனப்படும் மின்காந்த ஸ்கேனிங் ...
Read More »‛சார்க்’ பாதுகாப்பு விவகார மாநாடு இன்று துவக்கம்
சார்க் அமைப்பிலுள்ள நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு டில்லியில் இன்று துவங்கி இரு நாட்கள் நடைபெறுகிறது. இதில் பாக்., தவிர பிற நாடுகள் அனைத்தும் பங்கேற்கின்றன. இந்தியா சார்பில் நடத்தப்படவுள்ள சார்க் நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான மாநாடு டில்லியில் இன்று(22-09-16) துவங்குகிறது. இம்மாநாட்டில் பாக்., தவிர்த்து நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, ஆப்கன், மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இரு நாள்களுக்கு நடைபெறும். இம்மாநாட்டில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க் கூட்டமைப்பு நாடுகள் கலந்தாலோசிக்க உள்ளன. ஜம்மு ...
Read More »நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா?
பிரபல இந்தி நடிகை ஜியாகான். இவர் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார். ஜியாகான் 2013-ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த மன வேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த ...
Read More »ட்விட்டரில் ‘மிச்சம்’ பிடிக்க நான்கு புது அப்டேட்!
ட்விட்டர் தளத்தில் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இனி, ட்வீட்டுகளில் இணைக்கும் படங்கள், வீடியோக்கள் போன்றவை 140 கேரக்டர்களுள் கணக்கு எடுத்துக் கொள்ளப்படாது. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் சிறப்பம்சம் மற்றும் பயனர்களை சில சமயங்களில் வெறுப்பேற்றும் அம்சம் ரெண்டுமே 140 கேரக்டர்கள் என்பதுதான். ஒரு ட்வீட்டில் அதிக பட்சம் 140 எழுத்துக்கள் மட்டுமே (வார்த்தை இடைவெளி உட்பட) ட்விட்டரின் விதி. இதில் ட்வீட்டில் வீடியோ, புகைப்படங்கள் போன்றவை இணைக்கப்பட்டிருந்தால் அவையும் 140 கேரக்டரில் கணக்கெட்டுக்கப்பட்டு வார்த்தைகள் எண்ணிக்கை குறையும். இதனால் ஒரு ட்வீட்டில் ...
Read More »காவிரி வரலாறு
பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் காவிரி என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் அது புறப்படும் இடத்துக்குத் தலைக்காவிரி என்று பெயர். ஓட்டமும் நடையுமாக கர்நாடகத்தில் 320 கி.மீ., தமிழ்நாட்டில் 416 கி.மீ. ...
Read More »தலைநிமிர்ந்து வாழ ! எழுக தமிழுக்கு அணி திரளுங்கள்!!
எமது அன்பிற்கினிய தமிழ் மக்களே! யுத்தம் முடிந்து சுமார் ஏழரை வருடங்கள் உருண்டோடிவிட்டது. நாங்கள் வாக்களித்து உருவாக்கிய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒன்றரைவருடம் ஆகிவிட்டது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளது. புதிய அரசாங்கம் இலங்கைத்தீவில் ஒரு நல்லாட்சியை உருவாக்கும் அது தமிழ் மக்களுக்குமான நல்லாட்சியாக இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இலங்கை தமிழ்மக்கள் தொடர்பாக முன்னைய அரசாங்கம் கொண்ட அதே நிகழ்ச்சி நிரல்களையே இந்த அரசாங்கமும் கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், அம்பாறை, திருகோணமலை போன்ற இடங்கள் பாரிய சிங்களக் ...
Read More »அவுஸ்ரேலிய அரசு 900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைத்தது
900 ஆண்டுகள் பழமையான பிரித்தியங்கரா தேவி சிலையை அவுஸ்திரேலிய அரசு மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ் ஷர்மாவிடம் முறைப்படி ஒப்படைத்தது. 2005-ம் ஆண்டு 8,40,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5½ கோடி) மதிப்புள்ள பழங்கால 3 அபூர்வ சிற்பங்களை இந்தியாவின் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் நடத்தி வந்த கலைக்கூடத்தில் இருந்து அவுஸ்ரேலியாவின் தேசிய கலைக்கூடம் விலைக்கு வாங்கியது. இவற்றில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரித்தியங்கரா தேவி சிலை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வரும் கற்சிலை என்று ...
Read More »ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்
பிரபல சாமியார் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க மோகன்லால் ஆர்வம் காட்டுகிறார். அவரை போன்ற தோற்றத்திலான தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். செக்ஸ் வாழ்க்கையும் ஆன்மிகம் சாந்ததுதான் என்று சர்ச்சை கருத்துகளை சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர் ரஜினீஸ் சாமியார். இவரை சீடர்கள் ஓஷோ என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் ஓஷோவுக்கு ஆசிரமங்களும் சீடர்களும் உள்ளனர். ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் வெளியிட்டு உள்ளார். நடிகர்-நடிகைகள் பலர் இவரது ஆன்மிக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பல சாமியார்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது. அதுபோல் ஓஷோவின் ...
Read More »யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்கலாம்
யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ‘யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும்’ என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. அவை வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை இயக்க பயன்படுத்தப்படுகிறது. வாகனங்கள் இயக்கப்படும் போது அதிக அளவில் கார்பன் வெளியாகிறது. இதனால் காற்று மூலம் ஏற்படும் பெரும்பாலான மாசுவுக்கு இது காரணமாக உள்ளது. தற்போது பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் ...
Read More »