குமரன்

சிட்னியில் இந்திய உணவுகள்!

A week in India எனும் உணவுத் திருவிழா அண்மையில் சிட்னி Shangri-La Hotel இல் நடைபெற்றது. ஆஸ்திரேலியர்கள் விரும்பி உண்ணும் உணவுவகைகளை இந்திய முறைப்படி சமைத்துக் காட்சிப் படுத்தியிருந்ததுடன் அவ்விடம் இந்தியாவின் மாறுபட்ட கலை கலாசாரங்களால், இசையால், வண்ணங்களால் நிரம்பியிருந்தது. மகேஸ்வரன் பிரபாகரன், பிரபல இந்திய சமையல் நிபுணர் Varun Gujral, மற்றும் சிட்னி Shangri-La Hotel இன் பிரதம சமையல் நிபுணர் Bo Sorensen ஆகியோரை சந்தித்து உரையாடுகிறார். http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?language=ta

Read More »

அவுஸ்ரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

அவுஸ்ரேலிய கிரிக்டெ்  அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.   இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் ...

Read More »

அஜீரணத்துக்கு ஆறுதல் தரும் சாதனம்!

ஒருவரது வயிற்றுக்கு, என்ன வகை உணவுகள் ஏற்றது என்பதை தீர்மானிக்க உதவும் சாதனத்தை சீனாவிலுள்ள, ‘ஹேக்ஸ்’ நிறுவனத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.’ஏர்’ (Aire) எனப்படும் இந்த கையடக்க சாதனத்தை வாயில் வைத்து ஊதினால், மூச்சுக் காற்றில் உள்ள வேதிப் பொருட்களில், வயிற்றுக் கோளாறுக்கு காரணமான வற்றை கண்டறிந்து, அச்சாதனம் சொல்லிவிடும். இச்சாதனத்தை, ‘ஏர்’ மொபைல் செயலியுடன் இணைக்கும்போது, அது பயனாளியின் உணவுப் பழக்கம் மற்றும் ஒவ்வாமைகளை தொடர்ந்து பதிவு செய்யும். பின், இப்போது என்ன வகை உணவை அவர் சாப்பிடலாம் என்ற ஆலோசனையையும் அது ...

Read More »

அவுஸ்ரேலியா அணியில் கிறிஸ் லைனுக்குப் பதில் பென் டங்க்

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் கிறிஸ் லைனுக்குப் பதிலாக பென் டங்க் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை அணி அவுஸ்ரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 17-ந்திகதி தொடங்குகிறது. இதற்கான அவுஸ்ரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் கிறிஸ் லைன் இடம்பிடித்திருந்தார். கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த லைனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இடது கை பேட்ஸ்மேன் பென் டங்க் ...

Read More »

தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது!

தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நடிகர் சூர்யா தெரிவித்தார். துபாய் உள்பட அனைத்து இடங்களிலும் நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படம் நேற்று வெளியானது. துபாயில் ஹயாத் ரீஜென்சியில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக நடிகர் சூர்யா நேற்று துபாய் வந்தார். முதல் காட்சியாக இரவு 7 மணி அளவில் திரையிடப்பட்ட ‘சிங்கம்-3’ படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார். முன்னதாக நடிகர் சூர்யா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிங்கம், சிங்கம்-2 படங்கள் ...

Read More »

எழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி!

இன்று(10) மட்டக்களப்பில்  தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, கிழக்கின் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு விவேகானந்தா மைதானத்தில் தற்போது  ஆயிரக்கணக்கான மக்களின் எழுச்சியுடன்  நடை பெற்றுக்கொண்டுள்ளது.

Read More »

பிரிஸ்பேனில் புரந்தரதாஸர் ஆராதனை விழா!

பிரிஸ்பேன் ( அவுஸ்ரேலியா )  ஸ்ரீ ராகவேந்திரா பக்தி மண்டலி ஏற்பாடு செய்திருந்த புரந்தரதாஸர் ஆராதனை விழா, பிரிஸ்பேன் க்ரிபித் பல்கலைக்கழக நாதன் வளாகத்தில் உள்ள மல்டி பெய்த் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆராதனை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆராதனையில் சிறியவர் முதல் பெரியவர் வரை புரந்தரதாஸரின் கீர்த்தனைகளை பாடி அவரை நினைவு கூர்ந்தனர். கர்நாடக இசை பிரியர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்புற செய்தனர். இறுதியில், வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Read More »

அவுஸ்ரேலியப் பிரதமரின் வீட்டருகே குழி

அவுஸ்ரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்புல் வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் குழி ஒன்று உருவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (7) பெய்த கனத்த மழையாலும் திடீர் வெள்ளத்தாலும் அந்தக் குழி உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது. நடைபாதையில் உருவாகியிருக்கும் அந்தக் குழியால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தனியார் சொத்துக்குச் சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அவ்விடத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று நகராட்சியின் தொழில்நுட்பச் சேவை இயக்குநர் தெரிவித்தார்.  

Read More »

பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா ?

சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பலமட்டத்தில் எழுத்துள்ளது. ஐ.நா மனித உரிமைச்சபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கிய பதினெட்டு மாத அவகாசத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக் கொண்டிருந்த விடயங்களின் நடைடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணிக்கின்றது. வரும் பெப்ரவரி 27ம் நாள் தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இக்காலக்கெடு நிறைவடைகின்றது. இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இப்பன்னாட்டுக்குழுவின் அறிக்கை வெளிவரவிருக்கின்றது. அனைத்துலக ...

Read More »

ஐபோன் 8: முன்னதாக துவங்கும் தயாரிப்பு பணிகள்

அப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழா இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐபோன் 8 அதிக ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதன் தயாரிப்பு பணிகள் முன்னதாகவே துவங்குகிறது என கூறப்படுகிறது. அப்பிள் ஐபோன்களின் 10-வது ஆண்டு விழாவையொட்டி ஐபோன் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்றும் அதிகளவு மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டையும் போன்றே இந்த ஆண்டும் அப்பிள் ஐபோன்கள் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் இவற்றின் தயாரிப்பு பணிகள் திட்டமிட்டதை விட முன்னதாகவே துவங்க ...

Read More »