அவுஸ்ரேலிய கிரிக்டெ் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இடம்பிடித்துள்ளார்.
இதேவேளை தினேஸ் சந்திமல்இ தனஞ்சய டி சில்வா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரம் வருமாறு, உப்புல் தரங்க ( அணித் தலைவர் ), நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரத்ன, டில்ஷான் முணவீர, குஷல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, சச்சித் பத்திரண, சாமர கப்புக்கெதர, சீக்குகே பிரசன்ன, நுவான் குலசேகர, இசுறு உதாண, தசுன் சாணக்க, லக்ஷான் சண்டகன், லசித் மாலிங்க, விக்கும் சண்ஜய ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இம் மாம் 17 ஆம் திகதி முதலாவது இருபதுக்கு – 20 போட்டி மெல்பேர்ணிலும் 2 ஆவது போட்டி 19 ஆம் திகதி விக்டோரியாவிலும் 3 ஆவது போட்டி 22 ஆம் திகதி அடிலெய்டிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal