அவுஸ்ரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்புல் வீட்டிற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் குழி ஒன்று உருவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (7) பெய்த கனத்த மழையாலும் திடீர் வெள்ளத்தாலும் அந்தக் குழி உருவாகியிருக்கும் என நம்பப்படுகிறது.
நடைபாதையில் உருவாகியிருக்கும் அந்தக் குழியால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தனியார் சொத்துக்குச் சேதமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவ்விடத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று நகராட்சியின் தொழில்நுட்பச் சேவை இயக்குநர் தெரிவித்தார்.