பிரிஸ்பேன் ( அவுஸ்ரேலியா ) ஸ்ரீ ராகவேந்திரா பக்தி மண்டலி ஏற்பாடு செய்திருந்த புரந்தரதாஸர் ஆராதனை விழா, பிரிஸ்பேன் க்ரிபித் பல்கலைக்கழக நாதன் வளாகத்தில் உள்ள மல்டி பெய்த் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆராதனை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆராதனையில் சிறியவர் முதல் பெரியவர் வரை புரந்தரதாஸரின் கீர்த்தனைகளை பாடி அவரை நினைவு கூர்ந்தனர். கர்நாடக இசை பிரியர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்புற செய்தனர். இறுதியில், வந்திருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal




