பாடசாலை ஒன்றில் மூக்குத்தி அணிந்துசென்ற இந்திய பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இடம்பெற்றுள்ளது. அணிகலன்கள் பள்ளியின் சீருடைகளுக்கு முரணானது என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். மூக்குத்தி அணியாமல் வந்தால் மட்டுமே குறித்த மாணவிக்கு பள்ளிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும், பள்ளியில் சேர்க்கப்படும்போது சீருடை குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு அதில் கையெழுத்து வாங்கிய பின்னரே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள், எனவே மாணவர்கள் அதனை பின்பற்றவேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்துள்ள பேட்டியில், இந்த நிலையில் என் ...
Read More »குமரன்
5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: 12 கடற்படை சாட்சியாளர்கள் வாக்கு மூலம்!
வெள்ளை வேனில் கடத்தி, சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சிறப்பு சி.ஐ.டி. விசாரணைகளில் இதுவரை 12 கடற்படை சாட்சியாளர்கள் நீதிவானுக்கு இரகசிய வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். குற்றவியல் சட்டத்தின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக கடந்த மூன்று மாதங்களுக்குள் இந்த 12 பேரும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இவ்வாறு இரகசிய சாட்சியங்களை வழங்கியுள்ளனர். குறித்த கடற்படை சாட்சியாளர்கள், கடத்தப்பட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்ட இடங்களிலும், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதானிகளின் கீழ் ...
Read More »ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது!
ஐ றோட் செயற்றிட்டம் வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ றோட் செயற்றிட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை உறுதியாக கூறுங்கள் என கேட்ட நிலையில், இந்த வருடம் மே மாதம் ஐ றோட் செயற்றிட்டத்தை நடை முறைப்படுத்துங்கள் என பிரதமா் ரணில் விக்கிரம சிங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். 3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் ...
Read More »மலேசியாவில் பிளாஸ்டிக் மாசுக்கு எதிராக களமிறங்கிய கிராம மக்கள்!
மலேசியாவில் எற்பட்டுள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டினை கட்டுப்படுத்தும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன. இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனியல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி மக்களின் நலன் கருதி பிளாஸ்டிக் எரிக்கப்படுவதற்கு எதிராகவும், ...
Read More »கூட்டமைப்பின் தலைமைக்குப் பொருத்தமானவர் யார்?
கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பாக இப்போதே கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. சம்பந்தன் மூப்பின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதால் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது. இந்தியாவின் தமிழ்நாட்டில் மு.கருணாநிதியும் மூப்பின் எல்லையில் நின்றபோது தி.மு.கவுக்கு அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனால் வாரிசு அரசியலில் ஊறிப்போன இந்தியாவில் வழக்கம்போல கருணாநிதியின் மகன்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினின் பெயர் நீண்ட காலமாகவே அந்தப் பதவிக்கு அடிபட்டு வந்தது. இதற்கு ஏற்றாற்போன்று தி.மு.கவின் செயல் தலைவராக அவர் அந்தக் கட்சியின் தலைவரான அவரது தந்தையாரான ...
Read More »ஜிமெயில் பாஸ்வேர்டு பாதுகாப்பை மேலும் வலிமையாக்குவது எப்படி?
ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பாஸ்வேர்டு பாதுகாப்பை மேலும் வலிமையாக்குவது குறித்து கூகுள் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டில் நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலான அனைத்துப் பரிவர்த்தனைகளும் இணையத்திலேயே நடைபெறும் காலகட்டத்தில் இருக்கிறோம். இதில் ஹேக்கர்கள், சைபர் திருடர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நம்மை, நமது தகவல்களைக் காத்துக்கொள்வது முக்கியமாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழுப் பாதுகாப்பை அளிக்க வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. அந்த வகையில், கூகுள் நிறுவனம் க்ரோம் எக்ஸ்டன்ஷனாக ...
Read More »வட மாகாண ஆளுநரை சந்தித்த இந்திய கல்வித்தூதுக்குழுவினர்
யாழ்ப்பாணத்தில் கடந்த 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சியில் கலந்துகொண்ட இந்தியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (13) முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மாணவர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதன் காரணமாக கல்வியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதனூடாக வட மாகாண ...
Read More »வடக்கு மக்கள் வாகன வரிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள புதிய வசதி !
வாகன வரிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய தன்னியக்க இயந்திரங்கள் வடக்கு மாகாணத்தில் 3 இடங்களில் பொருத்தப்படவுள்ளதென மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன வரிப் பத்திரங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அதைப் பெற்றுக் கொள்வதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அதை இலகுபடுத்தும் வகையில் தன்னியக்க இயந்திரம் மூலம் வாகன வரிப் பத்திரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள பிரதி முதன்மைச் செயலர் அலுவலகத்தில் பரீட்சார்த்தமாக ஏசியன் பவுண்டேசனின் தொழில் நுட்ப உதவியுடன் இந்த ...
Read More »மீண்டும் திறக்கப்படும் கிறிஸ்துமஸ் தீவு தடுப்புக்காவல் நிலையம்!
கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்புக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தீவில் அமைந்துள்ள தடுப்புக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்கவிருப்பதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் அந்தத் தடுப்புக்காவல் நிலையம் மூடப்பட்டது. அதிகமான குடியேறிகள் கிறிஸ்துமஸ் தீவிற்கு வரும் சாத்தியம் உள்ளதால், அதனைக் கையாள தடுப்புக்காவல் நிலைய வசதிகளை மீண்டும் திறக்கத் தாம் ஒப்புதல் அளித்ததாக திரு.மோரிசன் தெரிவித்தார்.
Read More »டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும் 5 பெண்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்பை தோற்கடிக்க ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்க 5 பெண்கள் வாய்ப்பு தேடுகிறார்கள். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு ...
Read More »