ஜிமெயில் பாஸ்வேர்டு பாதுகாப்பை மேலும் வலிமையாக்குவது எப்படி?

ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பாஸ்வேர்டு பாதுகாப்பை மேலும் வலிமையாக்குவது குறித்து கூகுள் அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டில் நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  பெரும்பாலான அனைத்துப் பரிவர்த்தனைகளும் இணையத்திலேயே நடைபெறும் காலகட்டத்தில் இருக்கிறோம்.

இதில் ஹேக்கர்கள், சைபர் திருடர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நம்மை, நமது தகவல்களைக் காத்துக்கொள்வது முக்கியமாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழுப் பாதுகாப்பை அளிக்க வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது.

 

அந்த வகையில், கூகுள் நிறுவனம் க்ரோம் எக்ஸ்டன்ஷனாக ‘பாஸ்வேர்டு செக்கப்’ என்னும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் உங்களுக்குத் தெரியாமல் உங்களின் பாஸ்வேர்டை யாராலும் மாற்ற முடியாது.

உங்களுடைய அக்கவுன்ட்டை பாதுகாப்பில்லாமல் இருப்பதாக கூகுள் உணர்ந்தால் உங்களின் பாஸ்வேர்டை மாற்றச்சொல்லி கூகுள் தன்னிச்சையாக எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

எப்படி இன்ஸ்டால் செய்வது?

* முதலில்  Chrome desktop extension-ஐ இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

* உடனே பிரவுசர் பாரில் பச்சை நிறத்தில் சரி என்ற குறியிடப்பட்ட Password Checkup தோன்றும்.

* எப்போதாவது தேர்ட்-பார்ட்டி சேவைகளில் பாதுகாப்பற்ற தளங்களுக்குள் நுழைந்தீர்கள் எனில், பாஸ்வேர்டை மாற்றச் சொல்லிக் கேட்கும்.

* பச்சை நிற ஐகான், சிவப்பு நிறத்துக்கு மாறும்.

* இதன்மூலம் உங்களின் பாஸ்வேர்டைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.