ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான, ‘ட்ரோன்’களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் மேல் பறக்கவிடுவது போன்ற அத்து மீறல்களும் அதிகரித்துள்ளன. எனவே, ராணுவம், காவல்துறையினருக்கு ட்ரோன்களை தடுக்க அல்லது அழிக்க புதிய வகை ஆயுதத்தை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கியிருக்கிறது ‘ரேதியான்’ நிறுவனம். மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகளை பயன்படுத்தும், ‘பேசர்’ என்ற இச் சாதனம் டிஷ் ஆண்டனா போன்ற அமைப்பையும், நுண்ணலைகளை உற்பத்தி செய்யும் பெரிய பெட்டி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது. ட்ரோன்கள் பறக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய ரேடார் வசதியும் இதில் ...
Read More »குமரன்
அவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை
அவுஸ்ரேலியாவின் தேசிய தினத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 26 ஆம் திகதி அவுஸ்ரேலியாவின தேசிய தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையில் சிட்னி, மெல்போர்ன், பேர்த் உள்ளிட்ட நகரங்களில் தேசிய தினத்தை மே 8ம் திகதி அல்லது மார்ச் முதலாம் திகதிக்கு மாற்றுமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனினும் இதனை ஏற்க மறுத்துள்ள அவுஸ்ரேலிய பிரதமர் மல்கம் டர்ன்புல் தேசிய தினத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என அறிவித்துள்ளார். பிரித்தானிய ஆட்சிக் காவலத்தில் குற்றங்களைச் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். அந்த வகையில் 1788 ஜனவரி ...
Read More »அவுஸ்ரேலிய ஓபன்: பீட்சாம்ராஸ் சாதனையை நடால் முறியடிப்பாரா?
அவுஸ்ரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரபெல் நடால்- ரோஜர் பெடரர் இன்று (29) மோதுகிறார்கள், இதில் பீட்சாம்ராஸ் சாதனையை ரபெல் நடால் முறியடிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் உலகின் 9-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), 17-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) மற்றும் இரண்டாம் நிலை ...
Read More »பழைய துணியிலிருந்து விமான எரிபொருள்!
வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து, எரிபொருட்களை தயாரிக்க முடியுமா? இன்று, உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த நோக்கத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். ஜப்பானின் சுற்றுச்சூழல் திட்டமிடல் அமைப்பான, ‘ஜெப்லான்’ பசுமை பூமி அமைப்பு மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை, பழைய துணிகளிலிருந்து, ‘பயோ எத்தனால்’ எனப்படும் எரிபொரு ளை தயாரிக்க முயன்று வருகிறது. பழைய துணிகளில் உள்ள பருத்தியை நொதிக்கவைத்து, அதில் கிடைக்கும் சர்க்கரைகளை கொண்டு விமான எரிபொருளை தயாரிப்பதே இந்த அமைப்புகளின் நோக்கம். இதற்கென, ஜப்பானிலுள்ள துணி விற்பனையாளர்களிடம் பேசி ...
Read More »வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு- முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரை
வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ஒரு நீரியியல் கொள்கையினை வகுப்பதற்கான சர்வதேச மற்றும் உள்ளூர் நிபுணர்கள் கலந்து கொள்ளும் ஆய்வரங்கு.28.01.2017 காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சி. வி . விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் அங்கு உரையாற்றுகையில், வடமாகாணத்தின் நீர்வளத்தினை மீட்டெடுத்தல், பாதுகாத்தல், பங்கிடுதல், முகாமை செய்தல் எனும் விடயப்பரப்புக்களை உள்ளடக்கியதாக வடமாகாணத்திற்குப் பொருத்தமான ...
Read More »சிட்னியில், புலிக்குப் போக்குக் காட்டிய வாத்து!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்றில், புலி ஒன்றுக்குப் போக்குக் காட்டிய வாத்தின் காணொளி இணையதளத்தில் பரபரப்பாகப் பரவி வருகிறது. ஒரு கட்டத்தில், தன்னைத் தின்னும் வெறியுடன் அலையும் அந்தப் புலிக்குப் பின்னால் கூட வாத்து நீந்தியபடி வந்தது. புலி தன்னைக் கவனிக்கவில்லை என்றதும் ‘வா வா’ என்பது போலத் தனது இறகுகளைப் படபடவென அடித்தது. சுமார் பத்து நிமிட முயற்சி வெற்றியளிக்காத நிலையில் குளத்தில் இருந்து வெளியேறியது புலி.
Read More »தமிழில் டப்பிங் பேச விரும்பும் ஐஸ்வர்யா மேனன்!
கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் நடிகைகள் ஓரிரு படங்களிலேயே நன்றாக தமிழ் பேசுவார்கள். இருப்பினும் அவர்களது பேச்சில் மலையாள வாசணை வீசுவதால் தனக்குத்தானே அவர்கள் டப்பிங் பேசுவதற்கு டைரக்டர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், நயன்தாராகூட பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நானும் ரெளடிதான் படத்தில்தான் முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசினார். அதேப்போல் திரிஷாவும் பல வருடங்களுக்குப்பிறகு தான் டப்பிங் பேசினார். ஆனால் தற்போது கழுகு கிருஷ்ணா நடித்துள்ள வீரா படத்தில் நாயகியாக நடித்துள்ள கேரளத்து பெண்குட்டியான ஐஸ்வர்யா மேனன், முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசுவதில் ஆர்வமாக ...
Read More »அவுஸ்ரேலிய அரச விருது பெறும் தமிழ் விஞ்ஞானி!
அணு மருத்துவம் மற்றும் உயிரியல், தொழில் நிறுவனங்கள், மற்றும் சமூகத்திற்கு துறைகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க சேவை; மற்றும் சமூக சேவை ஆற்றியமைக்காக பேராசிரியர் விஜய் குமார் Order of Australia AM விருது பெற்றிருக்கிறார்.
Read More »நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும்
சிங்களத் தலைமைகளை நம்பி அவர்களுடன் சேர்ந்திருந்து ஏமாற்றப்படுவதுதான் தேவையென்றால், நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும். இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் இன்னமும் என் தலையைக் குடைந்து கொண்டிருக்கிறது. இது ஒரு சிறுகதையாக அல்லது குறுநாவலாக இருந்தால் இதனைக் கற்பனை கலந்தது என்று தள்ளிவிடலாம். ஆனால் இது ஓர் அரசியல் கட்டுரை. அறிய வருவது, தெரிய வருகிறது, கூறப்படுகிறது என்ற மாமூலான ஊடகச் சொல்லாடல்கள் எதுவும் ...
Read More »எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம் – வீழமாட்டோம்!
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன. 1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய தமிழினத்தை பேரினவாதம் திட்டமிட்டு அழித்த வரலாறே 1983 இனக்கலவரம். அன்றிலிருந்து இருபத்தாறு ஆண்டுகள் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal