கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் நடிகைகள் ஓரிரு படங்களிலேயே நன்றாக தமிழ் பேசுவார்கள். இருப்பினும் அவர்களது பேச்சில் மலையாள வாசணை வீசுவதால் தனக்குத்தானே அவர்கள் டப்பிங் பேசுவதற்கு டைரக்டர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், நயன்தாராகூட பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நானும் ரெளடிதான் படத்தில்தான் முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசினார்.
அதேப்போல் திரிஷாவும் பல வருடங்களுக்குப்பிறகு தான் டப்பிங் பேசினார். ஆனால் தற்போது கழுகு கிருஷ்ணா நடித்துள்ள வீரா படத்தில் நாயகியாக நடித்துள்ள கேரளத்து பெண்குட்டியான ஐஸ்வர்யா மேனன், முதல் படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசுவதில் ஆர்வமாக உள்ளாராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வீரா படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்துள்ளேன். அழகியலான வேடம் என்பதோடு வழக்கமான ரொமான்ஸ் நாயகியாக இல்லாமல் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறேன் என்கிறார். மேலும், நான் சென்னையில் செட்டிலாகி பல வருடங்களாகி விட்டதால் தமிழை சுத்தமாக உச்சரிப்பேன். அதனால், வீரா படத்தில் எனக்கு நானே டப்பிங் பேசுவதற்கான வாய்ப்பு கேட்டு டப்பிங் தியேட் டருக்கு சென்று டெஸ்ட்டிங் பேசி விட்டு வந்திருக்கிறேன்.
எனது குரல் நன்றாக இருப்பதாக சொல்லி டைரக்டர் வாய்ப்பளித்தால் கண்டிப்பாக நான் டப்பிங் பேசி விடுவேன் என்கிறார் ஐஸ்வர்யா மேனன்