இனி சினிமாவில் குத்தாட்டம் ஆடும் காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கேத்தரின் தெரசா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது. இது தவிர படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி வருகிறார். அடுத்து பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கும் ‘ஜெய ஜானகி நயகா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட ...
Read More »குமரன்
கிரிக்கெட்டுக்கு ‘இன்டெல்’ தொழில்நுட்பம்!
கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது பிரபல சில்லு நிறுவனமான இன்டெல். சாம்பியன்ஸ் கோப்பை 2017ஐ ஒட்டி, ஐ.சி.சி.,யின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பல புதிய தொழில்நுட்பங்களை இன்டெல் வழங்கியுள்ளது. முதலாவதாக, ‘பேட் சென்ஸ்.’ கிரிக்கெட் மட்டையின் கைப்பிடி அருகே ஒரு உணரியை பொருத்தி, இன்டெல்லின், ‘கியூரி’ என்ற கருவியின் மூலம் அளப்பதால், இனி மட்டையாளர் பந்தை அடிக்கும் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியும். இந்த புள்ளி விபரங்கள் பயிற்சியாளர்களுக்கும், மட்டையாளர்களுக்கும் உதவும். அடுத்து, இன்டெல்லின் பால்கன், 8 என்ற ட்ரோன். இது மைதானத்தின் மேலே பறந்து, ஆடுகளத்தின் ...
Read More »அரசியலமைப்பில் வேறு எந்தவொரு திருத்தமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை – அஸ்கிரிய பீடம்
தேர்தல் திருத்தம் தவிர அரசியலமைப்பில் வேறு எந்தவொரு திருத்தமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்புக்கு பெளத்த பீடம் முழுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றது என்று அஸ்கிரிய மகாநாயக பீடம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு தொடர்பில் அரசியல் வாதிகளின் கருத்துக்களில் நம்பிக்கை இல்லை. புதிய அரசியல் அமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகாநாயக்க தேரர் பீடமும் ஒன்றுகூடி போராடவேண்டிய நிலைமை வரும் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க பீடம் குறிப்பிட்டுள்ளது. புத்தசாசன அமைச்சின் பிரதிநிதிகள் குழு நேற்று முன்தினம் இரவு அஸ்கிரிய மகாநாயக தேரர்களுடன் சந்திப்பொன்றை ...
Read More »நிபந்தனையுடன் மக்களைச் சந்திக்கும் சுமந்திரன்குழு!
அடுத்தடுத்து நெருக்கடிகளைச் சந்தித்துவரும் தமிழரசுக்கட்சி தன்னுடைய வாக்குவங்கியை தக்க வைப்பதற்கான முனைப்புக்களிலும் தீவிரம் காட்டிவருகின்ற அதேவேளையில் மக்கள் சந்திப்புக்களை எச்சரிக்கையுடன் அணுகுவதற்கும் தலைப்பட்டுவருகின்றமை தொடர்பிலான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. நடைபெற்றுமுடிந்த வடக்குமாகாணசபை நெருக்கடி நிலையினை அடுத்து ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முற்பட்டு தோல்விகண்ட தமிழரசுக்கட்சி தற்போது தங்கள் மீதான விமர்சனங்களை ஈடுசெய்வதற்கான கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருகின்றது. இளைஞர் அணிக் கூட்டம், செயற்குழுக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட சந்திப்புக்கள் நடைபெற்றுவருகின்ற நிலையில் மக்கள் சந்திப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நீர்வேலியில் நாளை ஏற்பாடாகியிருக்கின்ற ...
Read More »அவுஸ்ரேலியாவில் விமானக் கட்டணம் குறைவடைகிறது!
அவுஸ்ரேலியாவின் விமான பயணச் சீட்டுகளில் விலை குறைவடையும் என மெல்போர்ன் விமான நிலைய தலைமை அதிகாரி Lyell Strambi தெரிவித்துள்ளார். மெல்போர்ன் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோதே Strambi மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; மெல்போர்ன் விமான நிலையத்தில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டதனால், விமான நிறுவனங்கள் செலுத்தும் கட்டணங்கள் கணிசமாக குறைகின்றன என்றும், எனவே விமான நிறுவனங்களால் பயணக் கட்டணத்தை குறைக்க முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Read More »சிவகார்த்திகேயன், நயன்தாராவுக்கு விருது!
அபுதாபியில் நடைபெற்ற தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடிகருக்கான விருது சிவகார்த்திகேயனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கும் வழங்கப்பட்டது. அபுதாபி சுற்றுலா ஆணையத்தின் ஆதரவில் இந்த ஆண்டின் (2017) தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள் நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் சிறந்த ...
Read More »வளையும் ‘டிவி’ திரை!
திரைத் தொழில்நுட்பத்தில், பல புதுமைகளை விடாப்பிடியாக அறிமுகப்படுத்தி வரும் எல்.ஜி., அண்மையில் வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள, ‘டிவி’ திரையை அறிவித்துள்ளது. ஒ.எல்.இ.டி., தொழில்நுட்பத்தைக் கொண்ட இந்த, ‘டிவி’யை, சுவற்றில் ஓவியம் போல ஆணி அடித்து மாட்டிவிட்டு, தேவைப்படாதபோது சுருட்டி வைத்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல, இந்தத் திரைக்கு அப்பால் உள்ள வகைகளை, 40 சதவீத தெளிவுடன் பார்க்கவும் முடியும் என்கிறது எல்.ஜி., வர்த்தக வளாகங்களில் விளம்பரங்களுக்கும், பெரிய பதாகைகளைப் போல பொது இடங்களில் தொங்க விடவும் இந்த திரை பயன்படும் என்கிறது எல்.ஜி., இத்தனைக்கும் ...
Read More »அமெரிக்க பாடகியை காதலிக்கும் சவுதி தொழில் அதிபர்!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான நடிகை ரிஹானா, சவுதி அரேபிய தொழில் அதிபர் ஹசன் ஜமீலை காதலித்து வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, நடிகை ரிஹானா. 29 வயதான இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் ஜமீலை காதலிக்கிறார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக ஹசன் ஜமீல் இருக்கிறார். டொயோட்டா நிறுவன கார்களை அரேபியாவில் வினியோகிக்கும் உரிமை இவருடைய நிறுவனத்திடம் உள்ளது. ஜமீல் குடும்பத்தினர் சவுதியை சேர்ந்த ஜாக்கர் குழுவை சேர்ந்த ...
Read More »27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மக்கள் வசம்
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இதன்படி மக்கள், 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளமையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Read More »தமிழ்மொழி கற்க அவுஸ்ரேலிய அரசு உறுதுணையாக உள்ளது!
அவுஸ்ரேலிய நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியைக் கற்க அந்நாட்டு அரசு உறுதுணையாக உள்ளதாக அவுஸ்ரேலிய நாட்டின் தொழிலாளர் கட்சி பிரதிநிதியும், தமிழ் அரசியல்வாதியுமான ஓ.பழனிச்சாமி தெரிவித்தார். அரசுமுறைப் பயணமாக ஒருவாரம் இந்தியாவுக்கு வந்துள்ள 9 பேர் அடங்கிய அவுஸ்ரேலியா நாட்டு பிரதிநிதிகள் குழு தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் ஆய்வுப் பயணங்களை முடித்துக் கொண்டு பெங்களூருக்கு வியாழக்கிழமை வந்தது. பெங்களூரு அரசியல் செயல்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.சி. சேலிடால்போட், ஓ.பழனிச்சாமி உள்ளிட்டோர் அடங்கிய அவுஸ்ரேலிய பிரதிநிதிகள் குழுவினர், கட்டாய வாக்களிப்புமுறை ...
Read More »