கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியிருக்கிறது பிரபல சில்லு நிறுவனமான இன்டெல். சாம்பியன்ஸ் கோப்பை 2017ஐ ஒட்டி, ஐ.சி.சி.,யின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து பல புதிய தொழில்நுட்பங்களை இன்டெல் வழங்கியுள்ளது.
முதலாவதாக, ‘பேட் சென்ஸ்.’ கிரிக்கெட் மட்டையின் கைப்பிடி அருகே ஒரு உணரியை பொருத்தி, இன்டெல்லின், ‘கியூரி’ என்ற கருவியின் மூலம் அளப்பதால், இனி மட்டையாளர் பந்தை அடிக்கும் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியும். இந்த புள்ளி விபரங்கள் பயிற்சியாளர்களுக்கும், மட்டையாளர்களுக்கும் உதவும்.
அடுத்து, இன்டெல்லின் பால்கன், 8 என்ற ட்ரோன். இது மைதானத்தின் மேலே பறந்து, ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிய உதவும். வர்ணனையாளர்களுக்கும் தான்.
அடுத்து, ஓவல் மற்றும் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானங்களில் மெய்நிகர் காட்சிகளை ஒளிபரப்ப இன்டெல் உதவியுள்ளது.
இவற்றில், பேட் சென்ஸ் தொழில்நுட்பம்தான் கிரிக்கெட்டின் தன்மையையே மாற்றப் போகிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.