குமரன்

ஆஸ்திரேலியாவில் கொசுவால் கொசுவை ஒழிக்கும் நுட்பம்!

ஆஸ்திரேலியாவின் வடக்கு குவீன்ஸ்லாந்து பகுதியில், கொசுக்களை ஒழிக்கும் பெரிய அளவிலான பரிசோதனைக்கு, வெற்றி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆராய்ச்சி அமைப்பும், ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகமும், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’டின் கொசுக்கள் ஒழிப்பு ஆராய்ச்சி அமைப்பான, ‘வெரிலி’யும் இந்த வெள்ளோட்டத்தை அண்மையில் மேற்கொண்டன. ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை. எனவே, இனப்பெருக்கத் திறன் நீக்கப்பட்ட ஆண் கொசுக்களை ஆய்வகத்தில் ஏராளமாக உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை வெரிலி உருவாக்கியது. தவிர, ஆய்வகத்தில் உருவாகும் பெண் கொசுக்களிலிருந்து, ஆண் கொசுக்களை மட்டும் பிரித்தெடுக்க, ரோபோக்களை வெரிலி பயன்படுத்துகிறது. ...

Read More »

கறுப்பு யூலையும் – முள்ளிவாய்க்காலும்!

கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக்கப்பட்ட நிழற்படம் இது. கீர்த்தி பாலசூரிய என்ற எனது சிங்கள நண்பர் 12 நிழற்படங்கள் அடங்கிய கறுப்பு-வெள்ளை நிழற்பட சுருளை என்னிடம் சேர்ப்பித்தார். அந்த படங்களில் ஒன்றுதான் மேற்படி நிகழ்படமாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளாராக இருந்த நண்பர் கீர்த்தி பாலசூரியாவும் அவரது அமைப்பும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையும், விடுதலைக்கான போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து செயற்பட்டனர். ...

Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் செயற்கை நீர்வீழ்ச்சி!

சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் வானுயர்ந்த கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சியின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் குய்ஷுவ் மாகானத்தில் உள்ள குயாங் நகரத்தில் சமீபத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சி சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கட்டிடத்தில் இருந்து நீர் கீழே கொட்டும் அந்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 350 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை நீர்வீழ்ச்சி முழுவதும் மின்சார உதவியுடன் இயங்குகிறது. ஒரு மணி நேரம் இந்த நீர் வீழ்ச்சி ...

Read More »

மைத்திரி – ரணில் கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. ஐக்கிய தேசிக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாகவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

செம்மணியில் மீண்டும் மனித புதைகுழி தோண்டும் பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சம் தொடர்பான அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ். செம்மணி – நாயனர்மார்கட்டுப்பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஒர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன. குறித்த மனித எச்சங்கள் தொடர்பாக யாழ். காவல் துறை அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை காவல் துறை யாழ். நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற ...

Read More »

பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்!

ஹிந்தி படங்கள் இயக்கிய வந்த பிரபுதேவா, தேவி, குலேபகாவலி படங்களுக்குப் பிறகு பிசியான நடிகராகி விட்டார். தற்போது லட்சுமி படத்தில் நடித்து முடித்திருப்பவர் அடுத்தப்படியாக பொன் மாணிக்கவேல் உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பார்த்திபன் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கோடிட்ட இங்களை நிரப்புக படத்தை அடுத்து உள்ளே வெளியே-2 படத்தை இயக்குவதாக கூறிவந்த பார்த்திபன், இப்போது பிரபுதேவாவை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை இயக்குகிறாராம். இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக தேவி படத்தில் ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சஃபாரி சுற்றுலா!

கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சஃபாரி சுற்றுலாவை மேற்கொள்ளக்கூடிய வசதி கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யும் சுற்றலாப் பயணிகளுக்கு அறுகம் குடா மற்றும் திருகோணமலை போன்ற நகரங்களில் சுற்றுலா மேற்கொள்வதற்கு மேலதிகமாக, பானம பகுதியிலும் சஃபாரி சுற்றுலா மேற்கொள்ள முடியும். அறுகம் குடாவிலிருந்து 14 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாக பானம திகழ்வதுடன் கொழும்பிலிருந்து 8 ...

Read More »

பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும்!

குடும்­ப­மொன்று சமூ­கத்தில் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்க்­கைத்­த­ரத்­திலும் முன்­னே­றிச்­செல்­வ­தற்­காக தமது முழு முயற்­சி­யையும் மேற்­கொண்டு நகர்­வு­களை முன்­னெ­டுக்கும். அதில் வெற்­றி­பெ­று­கின்ற குடும்­பங்­களும் உள்­ளன. முன்­னேற்­ற­ம­டை­யாத குடும்­பங்­களும் உள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் ஒரு குடும்பம் சமூ­கத்தில் ஒரு நல்ல வாழ்க்­கைத்­த­ரத்தை அடை­ய­வேண்­டு­மென்றால் கடின உழைப்­புடன்கூடிய அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஆனால் அவ்­வாறு அந்தக் குடும்­பத்­தினால் தனித்து அதனை செய்ய முடி­யாது. அதற்கு மக்­களால் தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற அர­சாங்­கமும் பக்­க­ப­ல­மாக இருக்­க­வேண்டும். அதே­போன்று பொரு­ளா­தார ரீதி­யிலும் சமூக பாது­காப்பு ரீதி­யிலும் கடின உழைப்பின் மூலம் முன்­னேற்­ற­ம­டைந்து வரு­கின்ற குடும்­பங்கள் இயற்கை அனர்த்­தங்கள் ...

Read More »

தாய்லாந்து குகை மீட்புப் பணி!- பிரமிக்கவைத்த ஓவியக் கலைஞர்கள்!

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்க நடைபெற்ற பணிகளை அந்நாட்டு ஓவியக் கலைஞர்கள் தத்ரூபமாகச் சுவரில் வரைந்து அசத்தியுள்ளனர். ஒரு மாதமாக தாய்லாந்து என்ற பெயரை உச்சரிக்காதவர்களே கிடையாது என்ற அளவுக்கு உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களும் அவர்களை மீட்க நடைபெற்ற பணிகளும்தான். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட மிகவும் திறமை வாய்ந்த மீட்புப் படையினர் 18 நாள்கள் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகிய 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். ...

Read More »

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள்!

பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும், அதன் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், பிராந்திய விமான நிலையமாக பலாலியை தரமுயர்த்தும் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் இந்தப் பணிகளுக்காக மேலதிக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படாது எனவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித்சிங் சந்து மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கிடையிலான முத்தரப்புச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதன்போதே மேற்கண்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்கிணங்க ...

Read More »