அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்கட்டுள்ளது. நேற்று (17) அதிகாலை பற்றைகளின் மறைவிலிருந்து வழிப்போக்கர்களால் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இளம்பெணின் பெயர் Aya Masarwe (வயது 21) என தெரியவந்துள்ள அதேவேளை குறித்த பெண் இஸ்ரேலை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. குறித்த பெண் LaTrobe – Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இதற்காக அவர் அவுஸ்திரேலிய தற்காலிக விசாவில் தங்கியிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »குமரன்
மொழியாலும் ஆக்கிரமிக்கின்றதா சீனா?
ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளும் சீனாவுக்கு இருக்கின்றது. அந்த இடத்தைப்பிடிப்பதற்குரிய தகுதி இன்னும் இந்தியாவுக்கு இருக்கின்றதா என்றால் சந்தேகமே. சகல துறைகளிலும் இன்று ஆசியாவில் முதலிடத்திலிருக்கும் சீனா அமெரிக்காவிற்கு சவாலாக உருவெடுத்துள்ளது. எவ்வாறு ஒரு நாட்டிற்குள் உட்புகுந்து அந்நாட்டின் சகல விடயங்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை சீனாவிடம் தான் கற்க வேண்டும். சீனாவின் ஆக்கிரமிப்பு ஒரு நாட்டின் பொருளாதார சந்தை மட்டுமல்ல மொழி,கலாசாரம், அரசியல் ஆகியவற்றிலும் அது தனது கையை ஓங்கச்செய்துள்ளது என்பது இலங்கையைப்பொறுத்தவரை பொருத்தமாகத்தான் இருக்கின்றது போலும். சீனா ...
Read More »உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயி?
உலக வங்கி தலைவர் பதவிக்கு இந்திரா நூயியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் பரிந்துரை செய்துள்ளார். உலக வங்கியின் தலைவர் பதவியில் உள்ள ஜிம் யாங் கிம், அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். அவர் தனியார் உள்கட்டமைப்பு முதலீடு நிறுவனம் ஒன்றில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அடுத்து வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த பதவிக்கு தமிழ்நாட்டில் சென்னையில் தமிழ் பேசும் குடும்பத்தில் பிறந்த பெண்ணான இந்திரா நூயி ...
Read More »பிரியா வாரியர் நடித்த குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு!
கண்சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியார், தற்போது நடித்திருக்கும் ஒரு படத்தின் குளியலறை காட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஆண்டு கண் சிமிட்டலால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா வாரியார். தற்போது இவரது நடிப்பில் ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை பிரசாந்த் மாம்பூலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டு நடிகை ஸ்ரீதேவி துபாயில் குளியல் தொட்டியில் மூச்சுதிணறி இறந்துபோனார். தற்போது, வெளியான டீசரில் நடிகை பிரியா வாரியார் குளியல் ...
Read More »மிக மோசமான நிலைமையில் அவுஸ்திரேலியா!
இரண்டாம் உலக போருக்கு பின்னர் மிக மோசமான நிலைமை ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 1939ஆம் ஆண்டிற்கு பின்னர் அதாவத சரியாக 80 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியா முகம் கொடுத்துள்ள மிக மோசமான வெப்பநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வானிலை நிலைய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களில் சராசரி அளவைக் காட்டிலும் அங்கு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர். ...
Read More »சம்பந்தரின் கோரிக்கையும் சம்பந்தருக்கான கோரிக்கையும்!
நாட்டில் மீண்டும் ஒரு குருதிக்களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனின் புதிய அரசமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல், பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர்; ஓரணியில் நின்று, புதிய அரசமைப்பு வெற்றி பெற உழைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். எந்தத்தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து, முழுமூச்சுடன் பயணிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தரப் பகைவனும் இல்லை எனக் கூறுவார்கள். அவ்வகையில் ஜனாதிபதி ...
Read More »புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகர் இம்ரான் ஆஸ்மியின் மகன்!
பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஆஸ்மியின் மகன், தொடர் சிகிச்சைக்குப் பிறகு புற்று நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளான். இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஆஸ்மி. இவரது மகன் அயான். கடந்த 2014-ம் ஆண்டு அயான் 3 வயதாக இருக்கும்போது, மிக அரிதாக ஏற்படும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். பின்னர் தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளான். இந்த மகிழ்ச்சியை நடிகர் இம்ரான் ஆஸ்மி வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- 5 ...
Read More »சிறிலங்கா-அமெரிக்கா முக்கிய பேச்சுவார்த்தை!
சிறிலங்காவில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து அமெரிக்காவும் சிறிலங்காவும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்;டுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் அமெரி;க்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்சையும் மில்லிலேனியம் சலஞ்ச் ஒத்துழைப்பின் பிரதம அதிகாரியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர் அலைஸ் வெல்ஸ் மற்றும் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம் என பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான அமைச்சர் ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். பிராந்திய ...
Read More »கேமரூனில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தல்!
கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் 36 பயணிகள் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பிராந்தியத்தில் பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ...
Read More »வவுனியாவில் 694 ஆவது நாளாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தர அமெரிக்கா வரவேண்டும் என வலியுறுத்தி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 694 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினாலேயே இன்று இக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக வவுனியா கந்தசாமி கோவிலுக்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அங்கு வழிப்பாடுகளை மேற்கொண்ட பின்னர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியவாறு ...
Read More »