இந்தோனேசிய அரசுக்கு எதிராக அரசு அலுவலகங்களை சூறையாடிய போராட்டக்காரர்கள் பப்புவா நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீவைத்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியம் பப்புவா. டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்த பிராந்தியம் 1963-ம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை தானே தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால் இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை இந்தோனேசியா வலுக்கட்டாயமாக தன்னோடு இணைத்துக்கொண்டு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது. இதனால் பப்புவா பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாத அமைப்பு பல ஆண்டுகளாக இந்தோனேசிய அரசுக்கு எதிராக போராடி வருகிறது.இந்த நிலையில், ...
Read More »குமரன்
கட்சி அரசியலே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடை!
கட்சி அரசியல் செயற்பாடுகளே மலையக கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பல அதிபர்கள் நியமனம் பெற்றுள்ளார்கள். பலர் பழிவாங்கப்பட்டுள்ளார்கள். தற்போதும் கூட மலையக கல்வி நிகழ்வுகளில் அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றது என ஓய்வு நிலை பேராசிரியர் த. தனராஜ் தெரிவித்தார். ஒரு சமூகத்தின் மேம்பாட்டுக்கு மட்டுமே அரசியல் பயன்பட வேண்டுமே தவிர ஒரு சமூகத்தை மட்டம் தட்டுவதற்கும், அழிப்பதற்கும், ஒடுக்குவதற்கும் பயன்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மலையகத்தின் சமகால அரசியல் ,பொருளாதார ,கல்வி நிலைமைகள் பற்றி அவர் வீரகேசரி ...
Read More »மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை !
முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஓருவர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 11.08.2019 அன்று குடும்பஸ்தர் ஒருவர் 04 இளைஞர்களால் நாவற்காட்டு பகுதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். தாக்குதலிற்கு உள்ளான குடும்பஸ்தர் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதலிற்கு உள்ளான நபர் பாமர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கூலித்தொழில் புரிந்து தமது குடும்பத்தை நடாத்தி வருபர் ஆவார். இத்தாக்குதல் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை காவல் துறை நிலையைத்திற்கு ...
Read More »50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடும் யோகிபாபு!
முன்னணி காமெடி நடிகராக நடித்து வரும் யோகிபாபு, தற்போது நடித்து வரும் படத்தில் 50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியிருக்கிறார். தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வர் இணைந்து நடிக்கும் படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. மேலும் இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாக இவரின் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி ...
Read More »சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்!
சிறிலங்காவின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. சிறிலங்காவிற்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது.
Read More »2005, 2010, 2015, 2020
நாட்டு மக்கள் அன்றாடம் எதிர்நோக்குகின்ற தீர்வுகள் காணப்படாத பல்வேறு பிரச்சினைகளையும் புறமொதுக்கி விட்டு, ஜனாதிபதித் தேர்தலே இன்று பேசு பொருளாகி விட்டது அல்லது, பேசு பொருளாக்கி விட்டார்கள். நம் நாட்டை ஜனாதிபதித் தேர்தல் காய்ச்சல் பீடித்து உள்ளது. ஆனாலும், எந்தத் தேர்தல்களும் கால ஒழுங்கில் நடத்த வேண்டியவைகளே. ஆகவே, அவை நடக்கட்டும். பெரும்பான்மை இன சிங்கள மக்கள், தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதீத ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனூடாகத் தாங்கள் ஆதரிக்கும் கட்சி, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுடன், தாங்களும் வளம் பெற வேண்டும் எனக் ...
Read More »அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 10 பேர் கைது!
கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் வென்னப்புவ பகுதியில் உள்ள வீ்டொன்றில் தங்கியிருந்த 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ, நைனாமடம் பகுதியில் உள்ள வீட்டில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சிலர் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சிலாபம் பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More »காஷ்மீரில் கடுமையான சூழல் !-டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களிடமும் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,காஷ்மீரில் கடுமையான சூழல் நிலவுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்நிலையில் இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ...
Read More »சுமித் மீது பவுன்சர் பந்து: அக்தரை கிண்டலடித்த யுவராஜ்சிங்!
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் மீது பவுன்சர் பந்து வீசப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த சோயிப் அக்தரை யுவராஜ் சிங் கிண்டல் அடித்துள்ளார். ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஷ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் சுமித் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரின் பவுன்சர் பந்தில் நிலை குலைந்தார். அவரது தலையை வந்து பதம் பார்த்தது. கீழே விழுந்த சுமித் மைதானத்தை விட்டு வெளியேறி பின்னர் ...
Read More »பெண் கல்வியை வலியுறுத்தும் இது என் காதல் புத்தகம்!
மது ஜி கமலம் இயக்கத்தில் அஞ்சிதா ஸ்ரீ நடிப்பில் உருவாகி வரும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம் பெண் கல்வியை வலியுறுத்தும் வித்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது என் காதல் புத்தகம். அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ...
Read More »