சிறிலங்காவின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
சிறிலங்காவிற்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal