முன்னணி காமெடி நடிகராக நடித்து வரும் யோகிபாபு, தற்போது நடித்து வரும் படத்தில் 50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியிருக்கிறார்.
தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வர் இணைந்து நடிக்கும் படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’.
மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. மேலும் இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாக இவரின் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.
குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி பாபு ஆவியாக வந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனமாடி பாடிய “இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே பாடலுக்கான காட்சிகள் சிவராக் சங்கர் நடனமாஸ்டர் சொல்லி கொடுக்க படமாக்கப்பட்டது.

பஸ் கம்பெனி முதலாளியாக தம்பி ராமையாவும், பிரபல தாதாவாக நான் கடவுள் ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் என்கிறார் இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன்.
விரைவில் திரைக்கு வர உள்ள “காவி ஆவி நடுவுல தேவி” படத்தை வசனம் எழுதி புகழ்மணி இயக்கி வருகிறார்.
Eelamurasu Australia Online News Portal