அவுஸ்ரேலியாவிற்குள் படகுகள் மூலம் பிரவேசித்துள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு, அகதி அந்தஸ்துகோரி விண்ணப்பிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நான்கு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பாதுகாப்புக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அவுஸ்ரேலிய குடிவரசு அமைச்சர் பீற்றர் டட்டன் கூறியுள்ளார். ஸ்ரீலங்காவில் இருந்து போருக்கு முன்னரும் போரின் பின்னரும் ஆபத்தான கடல்வழிப்பயணங்களை மேற்கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்ரேலியாவில் புகலிட தஞ்சம் கோரியிருந்தனர். இலங்கையை தவிர ஏனைய ஆசிய மற்றும் ...
Read More »குமரன்
மங்கள மைத்திரியுடன் அவுஸ்ரேலியாவிற்கு பயணம்!
சிறீங்காவில் நாளைய தினம் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றத்தில் தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சு மாற்றப்பட்டு அவருக்கு நிதித்துறை மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கள் வழங்கப்படலாம் என கடந்தவாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நாளை மறுதினம் அவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை முன்னெடுக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் சிறீலங்கா ஜனாதிபதி முதலில் கன்பரா செல்லவுள்ளதுடன் ...
Read More »தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – மெல்பேர்ண் & சிட்னி 2017
தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – மெல்பேர்ண் அவுஸ்திரேலியா மெல்பேர்ண்நகரில் உணர்வெழுசிசியுடன் நடைபெற்ற மே- 18 தமிழர் இனவழிப்பு நினைவேந்தல் நினைவுநாள். கடந்த 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தநாட்களில் சிங்களப்பேரினவாதஅரசினால் தமிழ்மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவழிப்புப்போரின்போது காவுகொள்ளப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்களின் எட்டாவது ஆண்டுநினைவுதினமும் காலத்திற்குக்காலம் சிங்களப்பேரினவாத அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவான தமிழர் இனவழிப்பு நினைவுநாளும் மெல்பேர்ண்நகரில் கங்கேரியன் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 18-05-2017அன்று மாலை 6.30மணிக்கு மண்டப நினைவேந்தல்நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வை செல்வி மது பாலா அவர்களும் (தமிழ்மொழியிலும்) திரு ...
Read More »20-வது குழந்தையை எதிர்நோக்கும் குடும்பம்!
பிரிட்டனைச் சேர்ந்தவர் நோயல் ராட்போர்ட். இவர் மனைவி சூ. சூ-வுக்கு 14 வயது இருக்கும் போது திருமணம் செய்தார் நோயல். குழந்தைகளின் மீது அதிக பிரியம் கொண்ட இவர்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை கடமையாகவே செய்து வந்தனர். இதனால் பிரிட்டனில், நோயலில் குடும்பம் அவ்வளவு ஃபேமஸ். ’அந்த மெகா குடும்பமா, ஆத்தாடி…19 குழந்தைகளை வச்சுகிட்டு எப்படித்தான் காலம் தள்ளுறாங்களோ?’ மக்கள் பேசிக் கொள்வர். சகல் 4 டாக்குமென்டரியில் இவர்கள் குடும்பம் வந்த பிறகு பிரிட்டனின் சந்துபொந்தெல்லாம் இவர்கள் பிரபலமாகிவிட்டார்கள். அப்படிப்பட்ட குடும்பத்துக்கு செப்டம்பர் மாதம் 20-வதாக ...
Read More »இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன் தங்கை திருமணம்!
இங்கிலாந்து இளவரசி கேத்மிடில்டன், தங்கை கோடீசுவரரை மணந்தார். அவருக்கு லண்டனில் நேற்று (20) திருமணம் நடைபெற்றது. 33 வயதாகும் பிப்பா மிடில்டன் கோடீசுவரரை மணக்கிறார். அவரது பெயர் ஜேம்ஸ் மாத்யூவ். இவர்களது திருமணம் லண்டன் அருகேயுள்ள இங்கிலீபீல்டு கிராமத்தில் உள்ள செயின்ட் மார்க் கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்றது. இது 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தேவாலயமாகும். திருமணத்தில் இளவரசர் வில்லியம், அவரது மனைவி இளவரசி கேத்மிடில்டன், குழந்தைகள் இளவரசர் ஜார்ஜ் (3), இளவரசி சார்லோட்(2) ஆகியோரும் பங்கேற்றனர்.
Read More »மைத்திரிபால சிறிசேன செவ்வாய்கிழமை அவுஸ்ரேலியா பயணம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுநாள் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியா செல்கின்றார். மே மாதம் 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை மைத்திரி அவுஸ்ரேலிய விஜயத்தில் கலந்து கொள்வதுடன் அங்கு பலதரப்பட்ட நிகழ்வுகளிலும் பங்கு பற்ற உள்ளார். மேலும், அவுஸ்ரேலியா வாழ் இலங்கையர்களை சந்தித்து விசேட உரையாற்றவும் உள்ளார்.
Read More »தீக்ஷிதாவின் புதிய நிபந்தனைகள்!
திரிஷா வழியில் நடிகையாக அவதாரம் எடுத்துள்ள நடிக தீக்ஷிதா படங்களில் நடிக்க பல நிபந்தனைகளை போடுகின்றார். தோழியாக நடித்து நாயகி ஆனவர் திரிஷா. அந்த வரிசையில் இப்போது மேலும் ஒருவர் நாயகி ஆகி இருக்கிறார். அவர் பெயர் தீக்ஷிதா மாணிக்கம். ‘திருமணம் என்னும் நிஹ்கா’, ‘ஆகம்’, படங்களில் நடித்த தீக்ஷிதா ‘நகர்வலம்’ படத்தின் நாயகி ஆனார். இதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. சென்னையை சேர்ந்த இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மாடலிங் செய்தார். 2012-ல் மிஸ் சவுத் இந்தியா போட்டியில் இறுதி ...
Read More »இரட்டை கமரா கொண்ட சாம்சங்!
சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கமரா அமைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி சி10 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் தகவல்களை இங்கு பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை கமரா அமைப்பு வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு முன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரட்டை கமரா கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இணையத்தில் கசிந்துள்ள சாம்சங் கேலக்ஸி ...
Read More »தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டம்!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தி அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் மாபெரும் அறவழிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி இப்போராட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் நடைபெறவுள்ளது. அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான இப்போராட்டத்தில் வடக்கு- கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினர், காணாமல் போனோர்கள், தமிழ் அரசியல் கைதிகள் ஆகியோரின் உறவினர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் ...
Read More »அவுஸ்ரேலியா செல்ல அனுமதி கோரும் யோஷித ராஜபக்ஷ!
வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வௌிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டிருந்ததாக அத தெரண செய்தியாளர் கூறினார். குறித்த ...
Read More »