பிரிட்டனைச் சேர்ந்தவர் நோயல் ராட்போர்ட். இவர் மனைவி சூ. சூ-வுக்கு 14 வயது இருக்கும் போது திருமணம் செய்தார் நோயல். குழந்தைகளின் மீது அதிக பிரியம் கொண்ட இவர்கள், குழந்தை பெற்றுக்கொள்வதை கடமையாகவே செய்து வந்தனர்.
இதனால் பிரிட்டனில், நோயலில் குடும்பம் அவ்வளவு ஃபேமஸ். ’அந்த மெகா குடும்பமா, ஆத்தாடி…19 குழந்தைகளை வச்சுகிட்டு எப்படித்தான் காலம் தள்ளுறாங்களோ?’ மக்கள் பேசிக் கொள்வர்.
சகல் 4 டாக்குமென்டரியில் இவர்கள் குடும்பம் வந்த பிறகு பிரிட்டனின் சந்துபொந்தெல்லாம் இவர்கள் பிரபலமாகிவிட்டார்கள்.
அப்படிப்பட்ட குடும்பத்துக்கு செப்டம்பர் மாதம் 20-வதாக வர இருக்கிறது இன்னொரு குழந்தை. ‘இதோட சரி, இனும குழந்தை பெத்துக்க விரும்பலை’ என்கிற சூ-க்கு தனது 17 வது குழந்தை இறந்து போனதில் ஏகப்பட்ட வருத்தம்!
Eelamurasu Australia Online News Portal