இரட்டை கமரா கொண்ட சாம்சங்!

சாம்சங் நிறுவனத்தின் இரட்டை கமரா அமைப்பு கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி சி10 என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் தகவல்களை இங்கு பார்ப்போம்.

சாம்சங் நிறுவனத்தின் சி சீரிஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை கமரா அமைப்பு வழங்கப்படலாம் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனிற்கு முன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இரட்டை கமரா கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனின் புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. இணையத்தில் கசிந்துள்ள சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படத்தில் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனின் சிறிய பாகம் மட்டுமே பதிவாகியுள்ளது என்றாலும் சில தகவல்கள் அம்பலமாகியுள்ளது. அதன்படி கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போன் ரோஸ் கோல்டு நிறம் கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
இத்துடன் இரட்டை கேமரா அமைப்பு, இரு கமராக்களின் இடையே டூயல்-எல்இடி பிளாஷ், ஆன்டெனா பேண்ட், பவர் – லாக் பட்டன் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. தற்சமயம் வரை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படவுள்ள மற்ற சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
எனினும் சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னதாக வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் வழங்கப்பட்ட நிலையில், புதிய சி10 ஸ்மார்ட்போனில் இதே அளவு ரேம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.