குமரன்

‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா?

இளம்பெண்கள் பலரும் இந்த புகைப்படம் மோகம் என்னும் மாயவலையில் சிக்கியுள்ளனர். புற அழகு மட்டுமே முக்கியம் என்ற மனப்போக்கு இன்றைய பெண்களிடம் காணப்படுகிறது. புகைப்படம் என்பது நமது ஞாபகங்களை உறைய வைக்கும் ஒரு அற்புதமான அதிசயம். பழைய புகைப்படங்களை பார்க்கும் போது நம்மையும் அறியாமல் அதில் மூழ்கி கடந்த காலத்திற்கு சென்று விடுவதுண்டு. அந்த காலத்தில் வீட்டின் வரவேற்பறையில் வரிசையாக தொங்க விடப்பட்டிருக்கும் கருப்பு வெள்ளை படங்கள் பல கதைகளைச் சொல்லும். பின்னாட்களில், போட்டோ ஸ்டுடியோவிற்கு குடும்ப சகிதமாக சென்று விறைப்பாக நின்று போஸ் ...

Read More »

10 கதாநாயகர்களை இணைத்த இளையராஜா!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற இருக்கும் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்காக 10 கதாநாயகர்கள் இணைந்துள்ளார்கள். 2019-ம் ஆண்டு துவங்கியதும் இசைஞானி “இளையராஜா 75” இசை விழாவுக்காக இசைப்பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் மாஸ்டரோ இசைஞானி இளையராஜாவின் ‘இளையராஜா75’ நிகழ்ச்சியின் டிக்கெட் விற்பனை துவக்க விழா சமீபத்தில் மாபெரும் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து  டிக்கெட் விற்பனை ஆன்லைனில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது. பிப்ரவரி 2, 3 திகதிகளில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ...

Read More »

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி

சீனாவில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இந்த நிலையில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து 66 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.  2 பேர் இன்னும் மீட்கப்படவில்லை.  அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Read More »

அவுஸ்திரேலியாவில் உயிருக்கு போராடும் மலைப்பாம்பு!

அவுஸ்திரேலியாவில், உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஒட்டுண்ணிகள் நிறைந்த மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது பாம்பு பிடிப்பவர்களால் குறித்த மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குயின்ஸ்லாந்தின் கோல்ட் கோஸ்டில் ஒரு வீட்டின் பின்புறத்தில் உள்ள நீச்சல் குளத்தில் உடல் முழுவதும் ஒட்டுண்ணிகள் நிறைந்து உடல்நிலை சரியில்லாத நிலையில் மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. சிலந்திப்பேன் வகையைச் சார்ந்த உண்ணிகள் என்று அறியப்படும் சிறு பூச்சிகள் அதன் உடலின் மேல்தோலில் ஒட்டியிருந்தன. பாம்பை மீட்ட பாம்பு பிடிக்கும் நபர் அதனை காட்டுயிர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மருத்துவர்கள் அதன் உடலில் இருந்து 500க்கும் ...

Read More »

ஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்ட தெம்பு படக்குழுவினர்!

பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்னும் பாடலை தெம்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேய வெற்றிச்செல்வன் மூவிஸ் தயாரிப்பில் பழனிக்குமரன் இயக்கத்தில் ஜேபிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் “தெம்பு”. இப்படத்திற்கு ஜித்தேந்திர காளீஸ்வர் மற்றும் ஹரிபிரசாத் இசை அமைக்க தனசேகர் ஒளிப்பதிவு செய்ய சின்னபராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். விரைவில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற உள்ள நிலையில் பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜல்லிக்கட்டு’ எனும் சிங்கிள் டிராக்கை இப்படக்குழு ...

Read More »

அம்பாறையில் பலத்த மழை! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில் இரவு வேளைகளில் இம்மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.   மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. வீதிகள்  பலவற்றில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துகளுக்கும் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில், தம்பட்டை, தம்பிலுவில், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, ...

Read More »

உண்மையான பௌத்தர் எதையும் மீறமாட்டார்! -சுரேன் ராகவன்

வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பகுதிகளில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “விரைவில் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடவுள்ளேன். இது பௌத்தத்துக்கு எதிரானது. ஜனநாயக விரோதமானது. இத்தகைய செயற்பாடுகளை ஊக்குவிப்போருடன் தீவிரமான கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளேன். இந்தச் செயல்களுக்குப் ...

Read More »

தமிழர்களுக்கு உலக அரங்கில் ஆதரவு கிடைத்துள்ளது!

கடந்த போர்ச் சூழலில் இல்லாத ஆதரவு உலக அரங்கில் தற்போது தமிழர்களுக்கு கிடைத்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  இவ்வாறு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார். ‘கருத்துக்களால் களமாடுவோம்’ எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “சந்திரிகா தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால் அதனை நான் ...

Read More »

புதிய ஆளுநர்கள் – புதிய வியூகம்?- நிலாந்தன்

மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ஓர் ஆண்டு வரை தான் பதவியிலிருக்கப் போகிறார். கடந்த ஒக்ரோபர் மாதம் அவர் ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றைச் செய்திருந்தார். அதில் அவர் தனக்கு வாக்களித்த சிங்கள தமிழ் ...

Read More »

அமெரிக்காவினால் பெண் ஜனாதிபதியொருவரை தெரிவுசெய்ய முடியுமா?

மசாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த செனட்டரும் கல்வியாளருமான எலிசபெத் வாரென் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு  மிக உயர்ந்த பதவிக்கு பெண்ணொருவரைத் தெரிவுசெய்வதற்கு வாக்களிக்கக்கூடிய ஆற்றல் தனக்கு இருக்கிறதா என்ற கேள்வியை தன்னையே கேட்பதற்கு அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான  ஆற்றல்வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என்று பல பெண்மணிகள் பரீசீலிக்கப்படுகின்ற நிலைமை உலகின் மிகவும் பழமைவாய்ந்த ஜனநாயகத்தின்  இன்றைய அரசியல் சூழ்நிலையில் காணக்கூடியதாக இருக்கின்ற ஒரு முக்கியமான வேறுபாடாகும். கிறிஸ்ரின் கில்லிபிராண்ட், கெலி அயோட், ...

Read More »