பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு என்னும் பாடலை தெம்பு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஜெய் ஸ்ரீ ஆஞ்சநேய வெற்றிச்செல்வன் மூவிஸ் தயாரிப்பில் பழனிக்குமரன் இயக்கத்தில் ஜேபிஆர் நடிப்பில் உருவாகி வரும் படம் “தெம்பு”. இப்படத்திற்கு ஜித்தேந்திர காளீஸ்வர் மற்றும் ஹரிபிரசாத் இசை அமைக்க தனசேகர் ஒளிப்பதிவு செய்ய சின்னபராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.
விரைவில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெற உள்ள நிலையில் பொங்கல் திருநாளையொட்டி நிகழும் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஜல்லிக்கட்டு’ எனும் சிங்கிள் டிராக்கை இப்படக்குழு வெளியிட்டுள்ளது.
இதனை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் (கில்டு) தலைவரான ஜாக்குவர்தங்கம் தலைமையில் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு தெம்பு படக்குழுவினர் இப்பாடலை சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal