நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், ...
Read More »குமரன்
“நான் உங்கள் முன் நிற்கவேண்டியவன் கிடையாது, உங்களுடன் படுத்திருக்க வேண்டியவன்,”!
உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நியூசிலாந்தில் நிகழ்ந்த இரண்டு மசூதிகளில் மீதான தாக்குதலில் 50 பேர் பலியாகினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வெள்ளை இன மேலாதிக்கவாதி நடத்திய அந்த தாக்குதலில் பலியான சிரிய அகதிகளான தந்தையும் மகனும் முதல்கட்டமாக நடந்த ஒரே இறுதி நிகழ்வில் அடக்க செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் அருகில் உள்ள இடுகாட்டில் கூடிய நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் சிரிய அகதிகளான காலித் முஸ்தபா மற்றும் அவரது 15 வயது மகன் ஹம்சா இறுதி அஞ்சலியை செலுத்தினர். அப்போது அவர்களது பெயர் ஒலிப்பெருக்கியில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, ...
Read More »அவுஸ்திரேலிய குடிவரவு கொள்கை திருத்தங்கள் !
அவுஸ்திரேலியாவுக்கு ஆண்டுதோறும் உள்வாங்கப்படவுள்ள நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை முப்பதினாயிரம் பேரினால் குறைக்கப்படவுள்ளது. இந்த விடயம் உட்பட முக்கிய குடிவரவு கொள்கை திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அரசாங்கம் இது தொடர்பிலான முக்கிய அறிவிப்பொன்றை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. . பிரதான நகரங்களில் ஏற்பட்டுள்ள சன நெருக்கடி மற்றும் நகரக்கட்டுமானங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய அத்தியாவசிய சேவை விரிவாக்கம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முக்கிய குடிவரவுக்கொள்கைகளில் திருத்தங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. அதனை அமைச்சரவையின் அங்கீகாரத்துக்கு முன்வைத்திருந்தது. இந்த மாற்றங்களின் பிரகாரம், தொழில்துறை சார்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு வருகை ...
Read More »கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்!
கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது. இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் ...
Read More »ஆஸ்திரேலியாவிடம் தோற்றது உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது, உலகக்கோப்பைக்கான எச்சரிக்கை அடையாளம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையை இந்தியா எளிதாக வெல்லும் என்று கருதப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்தத் தோல்வி இந்திய அணிக்கு சீர்தூக்கிப் பார்க்க சரியான நேரம் என்று கிரிக்கெட் விமசகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ...
Read More »ஜெனீவாவில் இலங்கை குறித்து விவாதம் இன்று!
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கைதொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. ஜெனிவா விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதம் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது. இன்று காலை ஜெனிவா நேரப்படி 9 மணியளவில் இலங்கை தொடர்பான விவகாரம் எடுக்கப்படவுள்ளது. முதலில் இலங்கை தொடர்பான அறிக்கையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் அது மீதான விவாதம் நடைபெறவுள்ளது. இதன்போது உரையாற்றவுள்ள ...
Read More »அவுஸ்திரேலியாவில் வீட்டு வாடகை கொடுக்கத் தவறியவர் அடித்துக்கொலை…!
அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் Airbnb சேவை மூலம் பெற்ற அறைக்கு வாடகை கொடுக்கத் தவறிய நபரை கொன்றவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேசன் என்னும் நபர் தமக்குக் கிட்டத்தட்ட 200 வெள்ளி வாடகை கொடுக்கத் தவறிய ரமிஸ் என்பரை அடித்துக் கொலை செய்துள்ளார். ரமிஸ் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜேசன் வீட்டில் தங்கியுள்ளார். ஜேசனுக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு நபர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் கொலை செய்தது சரியே என்று ஜேசன் காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Read More »அவுஸ்திரேலியரின் உயிரை காப்பாற்றிய ஐபோன்!
நபர் ஒருவரின் உயிரை நொடிப்பொழுதில் ஐபோன் காப்பாற்றிய த்ரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 43 வயதான நபர் காரில் இருந்து தனது வீட்டில் இறங்கியுள்ளார். அப்போது ஒரு நபர் தனது கையில் அம்புடன் நின்றிருப்பதை பார்த்து அதனை தனது ஐபோனில் காணொளி எடுத்துள்ளார். ஆனால், பாய்ந்து வந்த அம்பு, இவர் கையில் இருந்த ஐபோனை துளைத்து 2 இன்ச் வரை வெளிவந்திருந்தது. ஸ்கிரீன்கார்டு கழன்று வந்தது. அம்பு தாக்கியதில் போன் கையிலிருந்து பறந்து ...
Read More »இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்! -திரை விமர்சனம்
இளைஞன் கவுதம் (ஹரிஷ் கல் யாண்) சிறுவயதிலேயே தனது தாய், தன்னைவிட்டுப் பிரிந்த கோபத்தில் விட்டேற்றியான வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). இருவருக் கும் ஏற்படும் பரஸ்பரப் பழக்கம் காதலாக மாறுகிறது. அதேவேளையில் தாயின் மீதான கவுதமின் கோபம் அவனுக்குள் தீவிரமான உளவியல் பிரச்சினையாக உருக் கொள்கிறது. அனைவரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவன், தன் மீது அன்பு செலுத்துபவர் களைத் தனது உடைமையாகப் பாவிக் கிறான். எனவே தாராவை தனது நிரந்தர ...
Read More »முட்டிக் கொள்ளும் தமிழ்க் கட்சிகள்!
இலங்கையைப் பொறுத்தவரையில், இந்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், தீர்க்கமான ஒரு வாரமாக இருக்கப் போகிறது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, புதன்கிழமை (20) பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை தொடர்பான புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் தீர்மான வரைவு, பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாகக் கூறியிருக்கிறது. அவ்வாறு இணங்கினால், அடுத்தவாரம் வாக்கெடுப்பு நடத்தப்படாது. இணங்காவிடின், வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ...
Read More »