குமரன்

மோட்டோ எம் ஸ்மார்ட்போன்!

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட மோட்டோ எம் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 5.5 இன்ச் 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ P15 பிராசஸர், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், 4ஜி வோல்ட்இ, யுஎஸ்பி டைப்-சி, 3050 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Read More »

அவுஸ்திரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம்

அவுஸ்ரேலியாவில் குடியேறிய வெளிநாட்டவர்களின் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் கடந்த 2016ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள்தொகை 2.44 கோடி, இதில் 26 சதவீதம் பேர் வெளிநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என அவுஸ்திரேலிய புள்ளிவிபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் குடியேறியவர்களில் 1.91 லட்சம் பேர் சீனாவை சேர்ந்தவர்கள் என்றும், 1.63 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் 180 நாடுகளை சேர்ந்த 13 லட்சம் பேர் அவுஸ்ரேலியாவில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »

இறக்கும் தருவாயில் இருந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட தாய்

பிறந்து 32 நாட்களில் உயிரிழந்த குழந்தை, அசைவுடன் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை குழந்தையின் தாய் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் Catherine Hughes. இவருக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Riley என பெயரிடப்பட்ட குழந்தைக்கு பிறந்தவுடனேயே கிருமி தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து இருமல் வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் உள்ள மிஷினில் குழந்தையை வைத்து மருத்துவர்கள் பாதுகாத்து வந்தார்கள். ஆனாலும், Riley உயிரிழந்து விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது குழந்தை கை, கால்களை அசைக்கும் ...

Read More »

‘விக்ரம் வேதா’ கதையை கூறிய விதத்தில் புதுமை: விஜய் சேதுபதி

போலீஸ் – ரவுடி கதை தான். புதிதாக எதுவுமே இல்லை தான். ஆனால், சொன்ன விதம் புதுமையாக இருக்கும் என்று ‘விக்ரம் வேதா’ பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி கூறினார். புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விக்ரம் வேதா’. ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியதாவது: “நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் ‘விக்ரம் வேதா’ ...

Read More »

குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி அசத்தியுள்ளார் பெண் அரசியல்வாதி. பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். ஆனால் அவுஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் செயல் இதற்கு மாறாக அமைந்துள்ளது. ஜூன் 22ம் திகதி அவுஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து ...

Read More »

அவுஸ்ரேலியாவில் எத்தனை பேர் வீட்டில் தமிழ் பேசுகின்றனர்?

கடந்தவருடம் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகளை, சென்சஸ் திணைக்களம் வெளியிட ஆரம்பித்துள்ளது. இதன்படி அவுஸ்ரேலியாவில் வாழ்பவர்களில் வீட்டில் தமிழ் பேசுவதாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 73,161 என சென்சஸ் திணைக்கள தரவுகள் கூறுகின்றன. கடந்த 2011ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 50,151ஆக காணப்பட்ட அதேநேரம் 2006ம் ஆண்டு 32,704 ஆக காணப்பட்டது. இதேவேளை அவுஸ்ரேலியாவில் ஆங்கிலம் உட்பட வீட்டில் பேசப்படும் முக்கிய மொழிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க கடந்த 2011 இலிருந்து சுமார் 1.3 மில்லியன் பேர், புதிதாக அவுஸ்ரேலியாவில் ...

Read More »

நேரடி ஒளிபரப்பு வசதியுடன் VRDL360 கமெரா அறிமுகம்

சமூக வலைளத்தளங்கள் ஊடாக நேரடி ஒளிரப்பு செய்யக்கூடிய வசதியுடன் VRDL360 எனும் சிறிய ரக கமெரா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இக் கமெராவின் ஊடாக 7K அதி உயர் துல்லியம் கொண்ட புகைப்படங்களைம், 3K துல்லியம் வாய்ந்த வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும். இதனை லாஸ் ஏஞ்சலிலுள்ள VR Dongli எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மேலும் இதன் ஊடாக 360 டிகிரியில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும். 25,000 அமெரிக்க டொலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் தற்போது இக் கமெராவானது Indiegogo ...

Read More »

முப்பது நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

சியோமி நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி ஸ்மார்ட்போன் அமோக வரவேற்பை பெற்றிருப்பதாகவும், ஒரே மாதத்தில் 10 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. சியோமி ரெட்மி 4 சிறப்பம்சங்கள்: * 5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே * 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர் * 13 எம்பி பிரைமரி கமரா, எல்இடி பிளாஷ் * 5 எம்பி செல்ஃபி கேமரா * 4100 எம்ஏஎச் பேட்டரி * ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ

Read More »

மகள் நடிகை ஆவதில் விருப்பம் இல்லை: ஸ்ரீதேவி

தன்னுடைய மகள் தன்னைப்போல் நடிகை ஆவதில் துளியும் விருப்பமில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். ஸ்ரீதேவி இந்தியில் நடித்து இருக்கும் படம் ‘மாம்’. தமிழிலும் வெளியாகும் இந்த படத்தை ரவிஉத்யவார் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஸ்ரீதேவி… “ ‘மாம்’ படம் தாய்-மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை. இந்த கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்து விட்டேன். தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் பட உலகம் எனக்கு ஆதரவு ...

Read More »

குடியுரிமை விண்ணப்பங்கள் புதிய சட்டத்தின்படியே பரிசீலிக்கப்படும்!

அவுஸ்ரேலிய Citizenship-குடியுரிமைச் சட்டத்தைக் கடினமாக்கும் முனைப்பில் அரசு ஈடுபட்டுள்ள நிலையில், ஏப்ரல் 19ம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அனைத்தும், புதிய சட்டத்தின் கீழேயே பரிசீலிக்கப்படுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு முன்வைத்துள்ள குடியுரிமை தொடர்பான புதிய சட்ட முன்வடிவு இன்னமும் சட்டமாக்கப்படாத நிலையில், குடிவரவுத் திணைக்களம் இவ்வாறு தெரிவித்துள்ளது. குடிவரவுத் திணைக்களம்வசம் தற்போது 81 ஆயிரம் குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாத நிலையில் இருக்கும் அதேநேரம் தொடர்ந்தும் பலர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப்பின்னணியில் குடியுரிமை விண்ணப்பம் தொடர்பில் அழைப்பு மேற்கொள்பவர்களிடம், ஏப்ரல் 19ம் ...

Read More »