குமரன்

மெல்பேர்ன் 7வது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடம்!

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரங்களில் மெல்பேர்ன் ஏழாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கிறது. 100 க்கு 97.5 புள்ளிகள் மெல்பேர்னுக்கு கிடைத்துள்ளன. The Economist Intelligence Unit (EIU) உலகிலுள்ள 140 பெரிய நகரங்களின் மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தரப்படுத்தியதில் மெல்பேர்ன் நகரம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரமும் மூன்றாவது இடத்தில் கனடாவின் வான்கூவர் நகரமும் நான்காவது இடத்தில் ரொறன்டோ நகரமும் காணப்படுகின்றன. அடிலெய்ட் ஐந்தாவது இடத்தை தக்க ...

Read More »

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை! நாகசைதன்யா

உலகில் சமந்தாவை விட அழகான பெண் யாரும் இல்லை என்று நடிகர் நாகசைதன்யா கூறியுள்ளார்.நடிகை சமந்தாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. திருமணம் அக்டோபர் மாதம் 6-ந் திகதி கோவாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. சமந்தா-நாகசைதன்யா இருவரும் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொள்கின்றனர். திருமணம் முடிந்ததும் ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் தயாராகி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள அரசியல் ...

Read More »

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு!

சுதந்திர தினமான நேற்று, இந்தி யாவுக்கான, அமெரிக்க துாதர், மேரிகே கார்ல்ஸன், காஞ்சிபுரம் பட்டு உடுத்தி எடுத்த புகைப்படத்தை, ‘டுவிட்டர்’ சமூகவலைதளத்தில் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கான அமெரிக்க பெண் துாதர், மேரிகே கார்ல்ஸன். இந்திய கலாசாரத்தில் அதீத ஈடுபாடு உடையவர். இந்திய சுதந்திர தினத்தில், பாரம்பரிய புடவை உடுத்த விரும்பிய அவர், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில், அது தொடர்பான பதிவை, ஒரு மாதத்துக்கு முன் வெளியிட்டார். அதில், தனக்கு பொருத்தமான உடையை தேர்ந்தெடுத்து சொல்லும்படி, ‘நெட்டிசன்’களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இணையத்தை அதிகளவில் பயன்படுத்தும், ‘நெட்டிசன்’களின் ...

Read More »

கொடைக்கானலில் சிக்கிய அவுஸ்ரேலிய ஆந்தை!

கொடைக்கானல் கொடைக்கானலில் வனப்பகுதியிலிருந்து வெளிவந்த அரியவகை ஆந்தை ஓன்று குடியிருப்பு பகுதியில் சிக்கியது. பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு ஓட்டல் செல்லும் வழியில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு அரிய வகை ஆந்தை கீழே விழுந்து கிடந்தது. அவற்றை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த ஆந்தை அவுஸ்ரேலியா நாட்டில் உள்ள ஆந்தை இனத்தை சேர்ந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். ரேஞ்சர் ரவி கூறியதாவது: வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆந்தை வந்திருக்கலாம். ஆந்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளோம், என்றார்.

Read More »

அவுஸ்ரேலியாவில் இந்திய சுதந்திர தின விழா!

உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களில் இந்திய சுதந்திர தின விழா நேற்று (15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவுஸ்ரேலியாவின் கான்பெர்ரா, மெல்போர்ன், சிட்னி நகரங்களில் உள்ள தூதரகங்களில் சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர தின விழாவுக்கு அவுஸ்ரேலிய  பிரதமர் மால்கம் டர்ன்புல் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

Read More »

என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை – சமந்தா

என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார். பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி… ‘‘நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ‘ஏமாயசேசவே’ என்ற படத்துக்காக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது. இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று ...

Read More »

உப்பிலிருந்து மின்சாரம்!

உப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில்நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது, ‘மால்ட்டா!’ இது, கூகுளின் பரிசோதனை நிறுவனங்களுள் ஒன்று.கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ பல ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான், ‘கூகுள் எக்ஸ்!’ இது, பல தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகிறது. கூகுளின் தானோட்டி கார்கள் முதல், கூகுள் கிளாஸ் வரை பல புதுமைகள் இதே கூகுள் எக்சிலிருந்து வெளிவந்தவை.மால்ட்டாவின் தொழில்நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் கொண்டது. மின்சாரத்தை வெப்பமாக மாற்றி உப்புக் ...

Read More »

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பம்

அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக்கொள்கை  என்பதனால்  அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். எனினும்  இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இந்தநிலையில் அரசாங்க படிவங்கள் மும்மொழியில் மொழிபெயர்க்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.   எனவே இனிமேல்  எவரும் மும்மொழி மொழிச்சட்டத்தினை மீற முடியாது என்பதுடன்  எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது எனக்கூறவும் முடியாது எனவும் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் City West Falcons அணியை இறுதிக் போட்டிக்கு தெரிவு!

ஈழத்தின் முன்னணி வலைப்பந்து வீராங்கனை சிவலிங்கம் தர்ஜினி, தற்பொழுது விளையாடி வரும் அவுஸ்திரேலியாவின் City West Falcons அணி, உலகின் முன்னணித் தொடரான விக்டோரியா வலைப்பந்து லீக்கில் பூர்வாங்க இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. தர்ஜினி அரையிறுதியில் பெற்ற அதிக புள்ளிகளே அந்த அணி கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பை நெருக்கியுள்ளமைக்கு முக்கிய காரணியாகும். ACU Sovereigns அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை (09) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தர்ஜினி புள்ளிகளை அள்ளியதால் City West Falcons அணி 59-52 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் ...

Read More »

நான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை!- அவுஸ்ரேலிய துணைப் பிரதமர்

இரட்டை குடியுரிமை கொண்டிருப்பதால் தான் நாடாளுமன்றத்திற்கு தகுதியானவர் இல்லை என அவுஸ்ரேலிய துணைப் பிரதமர் பர்னாபி ஜோய்ஸ் (Barnaby Joyce) தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவிலும் நியூசிலாந்திலும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அவுஸ்திரேலிய துணைப் பிரதமரின் இந்த அறிவிப்பால் ஆளும் கன்சர்வேடிவ் ஆட்சியை நிலைகுலைய செய்யும் என எதிர்வு கூறப்படுகிறது. அத்துடன் அவர் பதவி விலகினால், அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ஜோய்ஸின் தாயார் அவுஸ்திரேலிய பிரஜை. அவரது தந்தை நியூசிலாந்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த 1947ஆம் ...

Read More »