என் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி…
‘‘நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ‘ஏமாயசேசவே’ என்ற படத்துக்காக சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது.
இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. திருமணத்துக்கு பிறகும் என் குணம் மாறாது.
திருமணமாகி நான் போக இருக்கும் குடும்பத்தினர், நான் நானாக இருக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது.’’ இவ்வாறு தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal