குமரன்

அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பும் கிறிஸ் வோக்ஸ்

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ், அவுஸ்ரேலியாவின் வேகப்பந்து வீச்சு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் அடுத்த மாதம் கடைசியில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, அந்த அணி ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்பே ஆஷஸ் தொடர் குறித்து வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். எதிரணியின் பலவீனத்தை சுற்றிக்காட்டி ஒவ்வொரு வீரர்களும் கூறிவருகிறார்கள். இதற்கு தக்க பதிலடியும் கொடுப்பார்கள். தற்போது இந்த தொடருக்கான விவாதம் சூடுபிடித்துள்ளது. ...

Read More »

பெண்கள் கிரிக்கெட்: அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் வெற்றி

ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. அரைசதம் அடித்த பியூமோன்ட் இங்கிலாந்து அணி கேப்டன் ஹெதர் நைட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 8 ...

Read More »

சிரியா: போரினால் பசிக்கொடுமை – தவிக்கும் பிள்ளைகள்!

சிரியாவின் டமாஸ்கஸ் நகரை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பிடமிருந்து மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. சிரியாவின் அரசாங்கப் படைகள் டமாஸ்கசின் கிழக்கிலுள்ள புறநகர்ப் பகுதியை முற்றுகையிட்டன. அங்குள்ள பகுதியில் தற்போது கடும் பஞ்சம் நிலவுகிறது. உணவுப் பற்றாக்குறையால் பிள்ளைகளே ஆக அதிகமாக அவதிப்படுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் பிள்ளைகளின் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தகவல்கள் கூறின. கிழக்கு கவுட்டா பகுதியில் குறைந்தது 1,200 பிள்ளைகள் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 1,500 பிள்ளைகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கக்கூடும் என்று UNICEF அமைப்பு தெரிவித்தது.

Read More »

அவுஸ்ரேலியா: சுறாவின் பிடியிலிருந்து உயிர்பிழைத்த சிறுவன்!

அவுஸ்ரேலியக் கரையோரம்15 வயது சாரா வில்லியம்ஸ் (Sarah Williams) சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கியது. தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரின் அருகில் சம்பவம் நடந்தது. சுறா தாக்கியதில் சாரா படகிலிருந்து கடலுக்குள் எறியப்பட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தையும் சகோதரனும் உதவிக்கு விரைந்தனர். சாராவைப் படகில் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் சென்றபோது படகைச் சுறா சுமார் 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வட்டமிட்டது. படகின் நீளம் நாலரை மீட்டர் நீளம். சுறாவும் அதே நீளத்தைக் கொண்டிருந்தது. சிறு காயத்துடன் உயிர்தப்பிய ...

Read More »

சூர்யாவின் சொடக்கு-க்கு கிடைத்த வரவேற்பு

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு..’ பாடல் இரண்டு நாட்களில் அதிக பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. சூர்யா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் ‘சொடக்கு…’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சொடக்கு பாடல் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை ...

Read More »

ஒன்பிளஸ் 5T: வெளியீட்டு திகதி விலை மற்றும் முழு தகவல்கள்

ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போன் சார்ந்த புது தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனின் தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில், ஒன்பிளஸ் சார்பில் எவ்வித தகவலும் உறுதிபட தெரிவிக்கப்படவில்லை. விளம்பர படங்கள், வலைத்தள பட்டியல் என சீன வலைத்தளங்களில் ஒன்பிளஸ் 5T தோற்றம், சிறப்பம்சங்கள், விலை  மற்றும் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஒன்பிளஸ் 5T ஸ்மார்ட்போனில் 18:9 ஆப்கெட் ரேஷியோ கொண்ட டிஸ்ப்ளே ...

Read More »

பலூன் மூலம் இணைய இணைப்பு!

இணைய வசதி இன்னும் எட்டாத பகுதிகளுக்கும், அந்த வசதியைத் தரும் நோக்கத்தில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ துவங்கியது தான், ‘புராஜக்ட் லுான்’ என்ற திட்டம். இதுவரை, சோதனை அளவிலான திட்டமாகவே இது இருந்தது. ஆனால், அண்மையில் இதை ‘லுான் இங்க்’ என்ற தனி நிறுவனமாக பதிவு செய்திருக்கிறது கூகுள். ஆனால், இது குறித்து, கூகுள், எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ராட்சத பலுான்களை அதி உயரத்தில் மிதக்க வைத்து, அதிலிருந்து இணைய சமிக்ஞைகளை, பூமியில் இணையம் எட்டாத பகுதிகளுக்கு வழங்குவது தான், லுான் இங்கின் ...

Read More »

அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக ஜுலி பிசப் நியமனம்!

அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல் வௌிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜுலி பிசப் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.

Read More »

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய பார்வதி

கேரளாவை சேர்ந்த நடிகை பார்வதி காரில் சென்று கொண்டிருந்த போது மிகப்பெரிய ஆபத்தில் இருந்த டிரைவர்களை காப்பாற்றியிருக்கிறார். நடிகை பார்வதி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டார். இதில் வாகனம் ஏதாவது உரசினால் மிகப்பெரிய ஆபத்தும், உயிர் இழப்பும் ஏற்படும் என்று கருதிய பார்வதி அங்கே தனது காரை நிறுத்தினார். அருகில் இறங்கி நின்று கொண்டு அந்த வழியாக வந்த ...

Read More »

‘ரோபோ’க்களின் மோதல்!

‘ரோபோ’ தொழில்நுட்பத்தில் யார் கில்லாடி என்பதை காட்டத் தயாரா என்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ரோபோ தயாரிப்பாளர்கள், ஜப்பானுக்கு சவால் விடுத்தனர். ஜப்பான் ரோபோ தயாரிப்பாளர்களும் அதை ஏற்றனர். அண்மையில், ஜப்பானில், ஒரு பழைய தொழிற்சாலை மைதானத்தில், அந்த வரலாற்று சிறப்புமிக்க ரோபோ சண்டை நடந்தது. அமெரிக்காவின், ‘மெகாபாட்ஸ்’ நிறுவனத்தின், ‘ஈகிள் பிரைம்’ என்ற, 12 டன் எடையும், 16 அடி உயரமும் கொண்ட ரோபோ களமிறங்கியது. ஜப்பானின், ‘சூய்டோபாஷி’ ரோபோ நிறுவனத்தின், ‘குராடா’ என்ற, 6.5 டன் எடையும், 13 அடி ...

Read More »