ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது.
அரைசதம் அடித்த பியூமோன்ட்
இங்கிலாந்து அணி கேப்டன் ஹெதர் நைட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டேமி பியூமோன்ட் 74 ரன்களும், சாரா டெய்லர் 69 ரன்களும், ஹெதர் நைட் அவுட்டாகாமல் 88 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய வீராங்கனை ஸ்கட் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்
பின்னர் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்திருக்கும் போது கனமழை பெய்தது. நீண்ட நேர ஆட்டம் தடைபட்டதால், டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 48 ஓவரில் 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியால் 48 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
71 ரன்கள் சேர்த்த ஹீலி
இதனால் இங்கிலாந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஹீலி 71 ரன்னும், போல்டன் 62 ரன்னும் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஹார்ட்லே 3 விக்கெட்டும், குன், சிவர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.