அவுஸ்ரேலியாவின் பதில் பிரதமராக அந்த நாட்டின் வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல் வௌிநாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜுலி பிசப் பதில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கூறத்தக்கது.