அவுஸ்ரேலியக் கரையோரம்15 வயது சாரா வில்லியம்ஸ் (Sarah Williams) சிறிய படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சுறா தாக்கியது. தெற்கு அவுஸ்ரேலியாவின் அடிலெய்ட் நகரின் அருகில் சம்பவம் நடந்தது.
சுறா தாக்கியதில் சாரா படகிலிருந்து கடலுக்குள் எறியப்பட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தையும் சகோதரனும் உதவிக்கு விரைந்தனர்.
சாராவைப் படகில் ஏற்றிக்கொண்டு கரையை நோக்கிச் சென்றபோது படகைச் சுறா சுமார் 10 நிமிடங்களுக்குத் தொடர்ந்து வட்டமிட்டது.
படகின் நீளம் நாலரை மீட்டர் நீளம். சுறாவும் அதே நீளத்தைக் கொண்டிருந்தது. சிறு காயத்துடன் உயிர்தப்பிய சாரா, தான் “Jaws” திரைப்படத்தில் இருந்ததைப் போல் உணர்ந்ததாகக் கூறினார்.
அவுஸ்ரேலியக் கடலோரப் பகுதியில் அண்மைக்காலமாக சுறா தொடர்பான இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன. நீர் விளையாட்டுகள் அதிகரித்துள்ளது இதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal