குமரன்

அந்நியர்கள் பேராசைக்காரர்கள் எங்கள் நிலத்தைவிட்டுப் போகவேண்டும்!எங்கள் நிலம் எங்களுக்கே!

சிலியின் காடுகளைப் (Chilean forests) பற்றித் தெரியாதவன், இந்தப் பூமியை நன்குணர்ந்தவன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” – என்கிறார் சிலியன் கவிஞர் பாப்லோ நெருடா. அந்தப் பழைய கவிஞர் 50 வருடங்கள் கடந்து வந்து அவர் உலவித்திரிந்த சிலியின் மேற்குக் காடுகளைப் பார்த்தால் “நாம வேற எங்கேயோ இருக்கிறோம்” எனக் குழம்பிவிடுவார். அந்த அளவிற்கு அந்த வனப்பகுதி முழுவதும் மாற்றமடைந்து தற்போது முழுக்கப் பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் நிரம்பியுள்ளது.  சிலியன் அரசாங்கமும், சில மேல்நாட்டு நிறுவனங்களும் அந்நாட்டின் ஒரு பகுதியான அரகானியாவில் ( ...

Read More »

‘‘மாணவர்கள் கல்விக்கு உதவுவதை உயர்வாக பார்க்கிறேன்’’ !-சூர்யா

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளஸ்–2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் சூர்யா விழாவில் கலந்து கொண்டு 21 மாணவ–மாணவிகளுக்கு ரூ.2 லட்சத்து ஐந்தாயிரம் பரிசு வழங்கினார். திண்டிவனம் தாய்தமிழ் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், ஏழை மாணவர்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் வாழை இயக்கத்திற்கு 1 லட்சமும் வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது:– கல்வி, ஒழுக்கம் சரியாக இருந்தால் வாழ்க்கை தவறாக போகாது. அகரம் மூலம் கல்வி உதவி பெறும் மாணவர்கள் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பறக்கும் டாக்சி சேவை!

அவுஸ்திரேலியாவில் வான்வழி பறக்கும் டாக்சி சேவையை அறிமுகம் செய்ய Uber நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிட்னியிலிருந்து மெல்போர்னுக்கு அல்லது மெல்போர்னிலிருந்து சிட்னிக்கும் அதி விரைவில் செல்லும் வகையில் வான்வழி பறக்கும் டாக்சி சேவை அறிமுகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் 2 ஆண்டுகளில், இந்த சேவையை அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்து 5 ஆண்டுகளில் அதாவது எதிர்வரும் 2023 ஆண்டுக்குள் இந்த சேவையை உலகம் முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. Uber நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த பறக்கும் டாக்சி UberAir என்று அழைக்கப்படும் என ...

Read More »

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை!

புதிய அரசியல் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிலையில், தமிழ் மொழிக்கான சம அந்தஸ்த்தை ஏற்படுத்தும் 21வது திருத்தத்தை கொண்டுவருவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More »

மல்லாகம் துப்பாக்கிச் சூடு! மனித உரிமை ஆணைக்குழு நேரடி விசாரணை!

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக, யாழ்ப்பாணம் மாவட்ட மனித உரிமை ஆணையாளர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு தற்போது நேரடியாகச் சென்று விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பா.சுதர்சனின் உறவினர்களிடமும், சம்பவத்தை நேரில் கண்ட சிலரிடமும் அவர்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். மல்லாகம் சகாய மாதா ஆலயம் முன்பாக நேற்று(17) இரவு இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. காவல் துறையினர்   பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை முறிந்துபோனால் அடுத்தது என்ன?

வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை முறிந்துபோனால் தென் கொரியாவுடன் ராணுவ ஒத்திகைகள் தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றத்தை உருவாக்கி வந்த வடகொரிய தலைவர் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததுடன், அமெரிக்காவுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கும் முன்வந்தார். அதன்படி ஜூன் 12ம் திகதி சிங்கப்பூரில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. சமரச ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. அப்போது வடகொரியாவில் உள்ள அணுஆயுதங்கள் அனைத்தையும் அழித்து விடுவதாக கிம் ஜாங் அன் ஒப்புதல் தெரிவித்திருந்தார். வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழித்தால் ...

Read More »

கார்கில் போரில் வீர மரணமடைந்த விக்ரம் பத்ராவின் கதையில் சித்தார்த் மல்ஹோத்ரா

கார்கில் போரில் மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் விக்ரம் பத்ரா குறித்த வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாக உள்ளது. 1999 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் துணிச்சலாகப் போரிட்டு தங்கள் உயிரை இழந்த இந்திய வீரர்களில் ஒருவர்தான் 24 வயதான கேப்டன் விக்ரம் பத்ரா. கார்கில் போரில் மரணம் அடைந்த விக்ரம் பத்ராவுக்கு பரம் வீர் சக்ரா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. தற்போது விக்ரம் பத்ராவின் வாழ்க்கைவரலாறு ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

ஜேஸன் ராயின் முத்தாய்ப்பான சதம், பட்லரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், கார்டிப்பில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. சதம் அடித்து அசத்திய ஜேஸன் ராய் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றபின் அந்த அணி சந்திக்கும் 2-வது தோல்வியாகும். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. வரும் செவ்வாய்கிழமை நாட்டிங்ஹாமில் நடக்கும் 3-வது போட்டியில் இங்கிலாந்து ...

Read More »

நியூசிலாந்து செல்லும் அவுஸ்திரேலியர்களுக்கு வரி விலக்களிப்பு!

நியூசிலாந்து செல்லும் சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து NZ$25 – NZ$35 வரையிலான தொகையை வரியாக அறவிட நியூசிலாந்து அரசு தீர்மானித்துள்ளது. ஆனால் அவுஸ்திரேலியர்களுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அடுத்த ஆண்டு பிற்பகுதியிலிருந்து இம் முறையானது நடைமுறைக்கு வருகிறது என கூறப்படுகிறது. அவுஸ்திரேலிய குடியுரிமை மற்றும் நிரந்தர வதிவிட உரிமை உள்ளவர்களுக்கும் Pacific Islands Forum நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கும் இதிலிருந்து விலக்களிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் வரை 3.8 மில்லியன் சுற்றுலாப்பயணிகள், நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இதில் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட 500பேரின் பட்டியலை ஐ.நா வெளியிட்டது!

இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கைக்காக காணாமல் ஆக்கப்பட்டடவர்களின் ...

Read More »