இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது. இப் பட்டியலில் குறிப்பிட்ட காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் தொடர்பில் இலங்கை அரசு, விரைவான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், அவர்களைக் கண்டுபிடித்தல் மற்றும் பாதுகாத்தலை ஐநா வலியுறுத்துவதாக காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா கூறியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஒவ்வொரு நொடியும் கலக்கத்தில் இருப்பதாகவும் அவர்களது நிலமையை கருத்தில் கொண்டு விரைவான நடவடிக்கைக்காக காணாமல் ஆக்கப்பட்டடவர்களின் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சுயெலா ஜனினா குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தலையீடு செய்யப்படவேண்டும் என்றும் எவ்விதமான விசாரணைகளையும் செய்யாமல் தீர்வுக்காக காத்திருக்குமாறு சொல்வது நியாயமற்ற செயல் என்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவின் தலைவர் சுயெலா ஜனினா மேலும் தெரிவித்தார்.